விவசாயத்துறை அமைச்சகம்
மாற்றத்தை விரும்பும் 111 விருப்ப மாவட்டங்களில் உள்ள தலா 25 கிராமங்களில் 2018 ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை கிரிஷி கல்யாண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
04 JUN 2018 4:46PM by PIB Chennai
2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலை நோக்கு திட்டத்திற்கு ஏற்ப, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை தொடங்கியுள்ள கிரிஷி கல்யாண் திட்டம், 2018 ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை செயல்படுத்தப்படுகிறது. விவசாயத்தில் நவீன தொழில் நுட்பங்களை மேம்படுத்தி, வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை கூறி உதவும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நிதி ஆயோக் வழிகாட்டுதலின் படி, ஊரக வளர்ச்சித் துறையுடன் ஆலோசித்து தேர்வு செய்யப்பட்ட விருப்ப மாவட்டங்களில் தலா ஆயிரம் பேருக்கு மேல் மக்கள் தொகை கொண்ட 25 கிராமங்களில் கிரிஷி கல்யாண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 25-க்கும் குறைவான கிராமங்கள் (ஆயிரம் பேருக்கு மேல் மக்கள் தொகை கொண்ட) இருந்தால், அந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
விவசாயத்தில் சிறந்த நடைமுறைகளை மேம்படுத்தி, வருமானத்தை அதிகரிக்க, இத்திட்டத்தின் கீழ் பல்வேறு முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
ஒவ்வொரு கிராமத்திலும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் / வேளாண் வளர்ச்சி அமைப்பு சார்பில், தேனீ வளர்ப்பு, காளாண் சாகுபடி மற்றும் சமையலறை தோட்டம் போன்றவை அமைப்பதற்கான பயிற்சிகள் நடத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சேர பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
(வெளியீட்டு அடையாள எண்: 1534300)
வருகையாளர் எண்ணிக்கை : 256