நிதி அமைச்சகம்
பிரதமர் கிராமப்புறச் சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்கு 500 மில்லியன் டாலர் கூடுதல் நிதி அளிப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்திய அரசும் உலக வங்கியும் கையொப்பமிட்டன
Posted On:
31 MAY 2018 2:09PM by PIB Chennai
பிரதம மந்திரி கிராமப்புறச் சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்கு 500 மில்லியன் டாலர் கூடுதல் நிதி அளிப்பதற்கான கடன் ஒப்பந்தத்தில் இன்று (31.05.2018) இந்திய அரசும் உலக வங்கியும் கையொப்பமிட்டன. இந்திய அரசின் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பிரதமர் கிராமப்புறச் சாலை மேம்பாட்டுத் திட்டம் பருவநிலை மாற்றங்களுக்கு ஈடு கொடுக்கும் 7,000 கிலோமீட்டர் நீளச் சாலையைப் போடவுள்ளது. இதில் 3,500 கிலோ மீட்டர் நீளச் சாலையானது பசுமைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமைக்கப்படும்.
2004 ஆம் ஆண்டு பிரதம மந்திரி கிராமப்புறச் சாலை மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்தே உலக வங்கி அதற்கு நிதி ஆதரவு அளித்துவருகிறது. இதுவரை உலக வங்கி 1.8 பில்லியன் டாலருக்கும் மேல் கடன்வகையில் முதலீடு செய்துள்ளது. பெரும்பாலும் பொருளாதாரத்தில் நலிந்த மற்றும் வட இந்தியாவின் பீகார், இமாச்சலப்பிரதேசம், ஜார்க்கண்ட், மேகாலயா, ராஜஸ்தான், உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மலைப்பிரதேச மாநிலங்களிலேயே இம்முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது 35,000 கிலோமீட்டர் அளவுக்கு கிராமப்புறச் சாலைகளை இட்டு மேம்படுத்தியுள்ளது. அனைத்துப் பருவநிலைச் சாலைகளுக்கும் செல்லக் கூடிய இந்தச் சாலைகளை 80 லட்சம் மக்கள் பயன்படுத்திவருகின்றனர்.
(Release ID: 1534228)