பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
முறைகேடுகளைத் தடுக்க தடுப்பு கண்காணிப்பு முறைக்கு தலைமைக் கண்காணிப்பாளர் அழைப்பு
प्रविष्टि तिथि:
24 MAY 2018 1:48PM by PIB Chennai
ஊழல் நடவடிக்கைகள் ஏற்படுவதை தடுக்க தடுப்புக் கண்காணிப்பு முறை தேவை என மத்தியக் கண்காணிப்பு ஆணையர் திரு. கே.வி. சவுத்ரி கூறியுள்ளார். புதுதில்லியில் இன்று ‘தடுப்புத் கண்காணிப்பு: நல்ல செயல்பாடுகளின் பரவல் என்ற பயிலரங்கத் தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், முறையான மேம்பாடுகள் மற்றும் கட்டமைப்புத் தீர்வுகளை அடையாளம் கண்டு பாதிப்புகளை அடைப்பதன் மூலம் இதனை எட்டமுடியும் என்றார். ஊழல் நடைமுறைகளை தடுப்பது மற்றும் நிறுவனத் திறனை விரிவுபடுத்துவது ஆகிய நோக்கங்களை இந்த நடவடிக்கைகள் நிறைவேற்றும் என அவர் கூறினார்.
இந்த ஒருநாள் பயிலரங்கில் ஐந்து அமர்வுகளில் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு அமைப்புகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் தாங்கள் கடைப்பிடிக்கும் நல்ல நடைமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பகிர்ந்து கொண்டன.
***
(रिलीज़ आईडी: 1533367)
आगंतुक पटल : 117