பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
மத்தியப் பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சருடன் சவுதி எண்ணெய் அமைச்சர் தொலைபேசியில் ஆலோசனை
Posted On:
18 MAY 2018 12:18PM by PIB Chennai
சவுதி அரேபியாவுக்கான எரிசக்தி, தொழில் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சர் திரு. காலித் அல்-ஃபாலிஹ் மத்தியப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதானை சந்தித்து தற்போதுள்ள எண்ணெய்ச் சந்தை சூழலில் இருநாடுகளுக்கு இடையிலான தொடர் கூட்டு ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை தெரிவித்தார். ரஷ்யாவுக்கான எரிசக்தி துறை அமைச்சர் திரு. அலெக்சாண்டர் நோவக், எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் தலைவராக உள்ள ஐக்கிய அரசு எமிரேட்டின் எரிசக்தி துறை அமைச்சர் திரு. சுஹைல் அல் மசூரி உள்ளிட்ட எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகள் அமைப்பில் உள்ள மற்றும் இல்லாத பெரும் உற்பத்தி நாடுகளுடன் நடைபெற்று வரும் ஆலோசனைகள் குறித்து திரு. அல்-பாலிஹ் அமைச்சர் பிரதானிடம் எடுத்துக்கூறினார்.
விலை உயர்வு மற்றும் அது நுகர்வோரிடமும் இந்திய நாட்டிலும் ஏற்படுத்தும் எதிர்மறை தாக்கங்கள் குறித்து அமைச்சர் பிரதான் கவலை தெரிவித்தார். விலைகள் நிலையானதாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை அமைச்சர் பிரதான் வலியுறுத்தினார். உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு அளிப்பது சவூதி அரேபியாவின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும் என அமைச்சர் பிரதானிடம் அமைச்சர் அல்-ஃபாலிஹ் உறுதி அளித்தார். நிலையான விநியோகம் குறித்த தமது உறுதிப்பாட்டிற்கு மறு உறுதி அளித்த அவர், இதர உற்பத்தியாளர்களுடன் இணைந்து போதுமான அளவு விநியோகம் மற்றும் விலை நியாயமாக இருப்பதையும் அரசு உறுதிப்படுத்தும் என்றார்.
*****
(Release ID: 1532720)
Visitor Counter : 262