வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

வர்த்தகத் துறையில் வர்த்தகத் தீர்வுகளின் தலைமை இயக்ககம் உருவாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 17 MAY 2018 2:43PM by PIB Chennai

வர்த்தகம் மற்றும் தொழிலக அமைச்சரவையில் வர்த்தகத் தீர்வுகளின் தலைமை இயக்ககத்தை உருவாக்குவதற்கான அறிவிக்கையை வர்த்தகத் துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக 2017 மே 7 ஆம் தேதி அன்று, இந்திய  அரசின் ( வணிக ஒதுக்கீடு) விதிகள்,1961 இன் மீது  மத்திய அரசால் செய்யப்பட்ட திருத்தத்தைத் தொடர்ந்து, வர்த்தகத் துறையில் வர்த்தகத் தீர்வுகளின்  தலைமை இயக்ககத்தை உருவாக்குவதற்கான ஒப்புதலை மாண்புமிகு வர்த்தகம் மற்றும் தொழிலக அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு அளித்துள்ளார்.

குவிப்புக்கு எதிரான, எதிர்வினைக்கடமைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து வர்த்தகத் தீர்வு நடவடிக்கைகளையும் நிர்வகிப்பதற்கான உயர்நிலை தேசிய ஆணையமாக வர்த்தகத் தீர்வுகளின்  தலைமை இயக்ககம் விளங்கும். குவிப்புக்கு எதிரான மற்றும் சார்புப் பணிகள் தலைமை இயக்ககமானது, பாதுகாப்புக்கான டிஜிஎஸ் மற்றும் க்யூஆர் தலைமை இயக்கங்கங்களை இணைத்து ஒரே தேசியத் தன்மையுடன் கூடிய ஓர் அமைப்பாகக் கொண்டுவரும். நமது உள்நாட்டுத் தொழிலகங்கள் மற்றும் பிற நாடுகளால் அவற்றுக்கு எதிராக நிறுவப்படும் வர்த்தகத் தீர்வு புலனாய்வுச் சம்பவங்கள் அதிகரித்துவருவதை ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்வதற்கான வர்த்தகப் பாதுகாப்பு ஆதரவையும் அது அளிக்கும். கடந்த மூன்று ஆண்டுகளில், நியாயமற்ற தொழில் நடவடிக்கைகள் அதிகரித்துவருவதை எதிர்கொள்வதற்காக இந்தியா 130 க்கும் மேற்பட்ட குவிப்புக்கு எதிரான/ எதிர்வினைக்கடமைகள்/ பாதுகாப்பு நடவடிக்கைகள் வழக்குகளை மேற்கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு www.pib.in வலைத்தளத்தைப் பார்க்கவும்.


(வெளியீட்டு அடையாள எண்: 1532676) வருகையாளர் எண்ணிக்கை : 177
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Marathi , Malayalam