சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

கடலோர மாநிலங்கள் ஒன்பதில் கடற்கரைகள், ஆற்றுப்பகுதிகள், குளங்கள் ஆகியவற்றை சுத்தப்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 19 குழுக்களை அமைத்துள்ளது

Posted On: 17 MAY 2018 11:42AM by PIB Chennai

2018-ஆம் ஆண்டு உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாட்டின் கடலோர மாநிலங்கள் ஒன்பதில் கடற்கரைகள், ஆற்றுப்பகுதிகள், குளங்கள் ஆகியவற்றைச் சுத்தப்படுத்த மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம் அமைச்சகம் 19 குழுக்களை அமைத்துள்ளது.

 

இந்தக்குழுக்களில், அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள், பள்ளிகளில் செயல்படும் சுற்றுச்சூழல் குழுக்களுக்கு பொறுப்பு வகிக்கும் மாநில ஒருங்கிணைப்பு முகமைகள், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள், மாவட்ட நிர்வாகங்கள், சம்பந்தப்பட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள மீன்வளக் கல்லூரிகள், இதர கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள் இடம்பெற்றிருக்கும்.

 

பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள ஒவ்வொரு கடற்கரை, நதிமுகம் மற்றும் குளப்பகுதிகளுக்கு ரூ.10 லட்சம் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

2018-ஆம் ஆண்டு உலகச் சுற்றுச்சூழல் தினக் கொண்டாட்டங்களை உலக அளவில்  நடத்தும் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தக் கொண்டாட்டங்கள் ஐ.நா தலைமையில் சுற்றுச்சூழல் தொடர்பான மிகப்பெரிய நிகழ்ச்சியாக கொண்டாடப்படும். இந்த ஆண்டின் உலகச் சுற்றுச்சூழல் தினத்தின் மையக்கருத்து “பிளாஸ்டிக் தூய்மைக்கேட்டை முறியடிப்போம்” என்பதாகும்.

 

தமிழ்நாட்டில் வைகை நதிமுகம் மற்றும் பாலவாக்கம், கன்னியாகுமரி, திருவெற்றியூர், எண்ணூர் கடற்கரைகள் இந்தத் திட்டத்தின்கீழ் தூய்மைப்படுத்தப்படும்.

 

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in  என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

                                ------



(Release ID: 1532631) Visitor Counter : 541