குடியரசுத் தலைவர் செயலகம்

சியாச்சினில் இராணுவத்திடையே திரு. ராம்நாத் கோவி்ந்த் பேச்சு அப்துல் கலாமுக்குப் பின் சென்ற குடியரசுத் தலைவர்

இடுகை இடப்பட்ட நாள்: 10 MAY 2018 3:32PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் சியாச்சின் இராணுவ முகாமுக்கு வியாழக்கிழமை (2018, மே 10) பயணமானார். அங்கு இராணுவ வீரர்களிடையே அவர் உரையாற்றினார். மேலும், அங்குள்ள குமார் போஸ்ட் எனப்படும் இராணுவ முகாமுக்கும் அவர் சென்றார். 2004ம் ஆண்டு சியாச்சினுக்கு அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சென்றார். அடுத்து, 14 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திரு. ராம்நாத் கோவிந்த் சென்றுள்ளார்.

இராணுவத்தினரிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், நாட்டின் முப்படைகளின் உயர் தலைவர் என்ற முறையில், ஒட்டுமொத்த நாட்டின் நன்றியையும் தெரிவிக்கும் வகையில் அங்கு வந்ததாகக் கூறினார்.

“சியாச்சின் உலகின் மிக உயரிய போர்க்களமாகும். கடும் குளிர் நிலவும் அங்கு வசிப்பது மிக மிகக் கடினமாகும். அத்தகைய சூழ்நிலையில் அங்கேயே தங்கியிருப்பதுடன் நாட்டின் எல்லையைக் காக்கும் விழிப்புடன் எதற்கும் தயாரான நிலையில் இராணுவத்தினர் அரும் பணியாற்றுகிறீர்கள். உங்களது உறுதி, அர்ப்பணிப்பு மிகவும் உயர்ந்தது. நாட்டைக் காப்பாற்ற நீங்கள் காட்டும் விசுவாசம் எல்லா குடிமக்களும் பின்பற்ற வேண்டியது.

சியாச்சின் மலைப் பகுதியில் நமது வீரர்கள் கடந்த 34 ஆண்டுகளாகக் காட்டி வரும் வீர தீரம் நமது எல்லை மிகுந்த பாதுகாப்போடு இருக்கிறது என்ற நம்பிக்கையை நாட்டு மக்களுக்கு தருகிறது. இந்த ஒட்டுமொத்த நாடும் நாட்டு மக்களும் ஆதரவாக இருக்கிறார்கள் என்ற தகவலை இங்குள்ள வீரர்களுக்குக் கூறிக் கொள்கிறேன்.என்று குடியரசுத் தலைவர் பேசினார்.

சியாச்சின் சிகர உச்சியில் 11 ஆயிரம் வீரர்களும் அதிகாரிகளும் “மேகதூத் நடவடிக்கை” (Operation Meghdoot) என்ற பெயரில் 1984ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி நடந்த இராணுவ நடவடிக்கையின்போது உயிர்த் தியாகம் செய்ததை நினைவூட்டும் போர் நினைவுச் சின்னத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை செலுத்தினார்.

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1531828) வருகையாளர் எண்ணிக்கை : 168
இந்த வெளியீட்டை படிக்க: English , Bengali