வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் வணிகத் தீர்வுகள் தலைமை இயக்ககம் உருவாக்கம்
Posted On:
09 MAY 2018 7:20PM by PIB Chennai
மத்திய வர்த்தக அமைச்சகத்தில் வணிகத் தீர்வுகள் தலைமை இயக்ககம் (Directorate General of Trade Remedies) உருவாக்கப்படுகிறது. இதற்காக இந்திய அரசின் (வர்த்தக ஒதுக்கீடுகள்) விதிகளில் (1961) மத்திய அரசு கடந்த மே 7ம் தேதி திருத்தம் கொண்டுவந்துள்ளது.
தற்போது வர்த்தக அமைச்சகத்தின் கீழ் பொருள் குவிப்புத் தடுப்பு மற்றும் அது தொடர்பான தீர்வைகள் இயக்ககம் (Directorate General of Anti-Dumping and Allied Duties) உள்ளது. அதற்கு மாற்றாக இந்தப் புதிய இயக்ககம் உருவாக்கப்படுகிறது.
தீர்வைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய வர்த்தகத் துறை பரிந்துரைப்பதற்குரிய வர்த்தக விதிகளைக் கட்டாயமாக்கும் வகையிலும் இந்த திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
வர்த்தக நடைமுறைகளை எளிதாகவும் விரைவாகவும் செயல்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த ஒற்றைக் குடையாக வணிகத் தீர்வுகள் தலைமை இயக்ககம் (DGTR) செயல்படும். இந்த இயக்ககம் வணிகத் துறையுடன் இணைந்து செயல்படும். இதன் பரிந்துரைகள் வணிகப் பொருள்கள் குவிப்பைத் தடுப்பது, எதிர்வினையாற்றல், தீர்வைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு உரிய பரிந்துரைகளை அளிக்கும். அவற்றை மத்திய வருவாய்த் துறை பரிசீலித்து தொடர் பணியை மேற்கொள்ளும்.
*****************
(Release ID: 1531786)
Visitor Counter : 166