குடியரசுத் தலைவர் செயலகம்

குடியரசுத் தலைவர் 65 ஆவது தேசியத் திரைப்பட விருதுகளை வழங்கினார் ; நமது திரைப்படங்கள் கலாச்சாரப் பரிவர்த்தனைக்கும் உலகெங்கும் வாழும் இந்திய மக்களை இணைப்பதற்கும் ஏற்ற முக்கியச் சாதனம் என்றார் அவர்.

இடுகை இடப்பட்ட நாள்: 03 MAY 2018 7:58PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் புது தில்லியில் இன்று ( 03.05.2018 ) 65 ஆவது தேசியத் திரைப்பட விருதுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், நமது திரைப்படங்கள் இந்தியாவின் மாபெரும் பலமான பன்முகத்தன்மைக்குப் பங்களிப்பும் பிரதிநிதித்துவமும் அளிக்கின்றன என்றார். நமது திரைப்படங்கள் அதன் விவரிப்பில் நமது நாகரிகம் மற்றும் பகிர்ந்த சமூகத்தின் லட்சியங்களுக்கு உண்மையாக இருப்பதற்கு ஊக்கமளிக்கிறது என்றும், அவை நாம் இன்னும் கடந்துசெல்ல வேண்டிய சமூகச் சவால்களுக்குக் கண்ணாடியாகத் திகழ்கிறது என்றும் அவர் கூறினார். அவை உலகளாவிய ஒரு மொழியில் இதனைச் செய்கின்றன என்றார் அவர்.

இந்தியாவில் திரைப்படங்கள், போஜ்புரியிலிருந்து தமிழுக்கு, மராத்தியிலிருந்து மலையாளத்திற்கு அதிலிருந்து மேலும் பல மொழிகளுக்கு எனப் பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்படுகின்றன என்று குடியரசுத்தலைவர் கூறினார். திரைப்படம் தன்னளவிலேயே ஒரு மொழியாக விளங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியை நாடெங்கும் ஒரு மொழியாகப் பிரபலப்படுத்துவதில் வேறெந்த நிறுவனத்தையும் விட இந்தித் திரைப்படங்கள் சிறப்பாகச் செயல்பட்டன . ஒரு சத்யஜித் ராய் அல்லது ஒரு ரித்விக் கடக் போன்றோரின் மனிதத்தையும் நுட்பங்களையும் பாராட்ட ஒருவர் வங்காளியாக இருந்தாக வேண்டிய அவசியம் இல்லை . பாகுபலி என்னும் இதிகாசத்தால் கட்டுண்டுபோக நாம் தெலுங்கு மொழியைத் தெரிந்துகொண்டிருக்க வேண்டியதும் இல்லை. மீண்டும் இப்போது தேசிய விருது பெற்றுள்ள ஏ.ஆர்.ரகுமான் அவருடைய பாடல்களின் தமிழ்ச் சொற்களைப் புரிந்துகொள்ள முடியாதவர்களிடையேயும் கூட அவருடைய இசையால் புகழ் பெற்றுள்ளார் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

திரைப்படம் எவ்வாறு கலாச்சாரமாக இருக்கிறதோ அவ்வாறே வணிகமாகவும் இருக்கிறது என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். ஆண்டொன்றுக்கு 1,500 திரைப்படங்களைத் தயாரிக்கும் அளவுக்கு இந்தியத் திரைப்படத்துறையானது உலகிலேயே மிகப் பெரிதானதாகத் திகழ்கிறது. இந்தியாவின் மென்சக்தியின் ஒரு வெளிப்பாடாகவும் கண்டங்களைக் கடந்து தடம் பதிக்கும் திறன் கொண்டதாகவும் அது விளங்குகிறது. நமது திரைப்படங்கள் ஜப்பான், எகிப்து, சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா மற்றும் பல தொலைதூர நாடுகளில் பார்த்து ரசித்து  பாராட்ட படுகின்றன. நமது திரைப்படங்கள் கலாச்சாரப் பரிவர்த்தனைக்கும் உலகெங்கும் வாழும் இந்திய மக்களைத் தொடர்பு கொள்வதற்கும் ஏற்ற முக்கியச் சாதனமாக விளங்கி அவர்களுக்கு  இந்திய வாழ்க்கையின் இசைலயத்தை அளிக்கிறது என்றார் குடியரசுத் தலைவர்.

நாம் திரைப்படத்தின் பரவசமானதும், மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். திரைப்படங்கள் உருவாக்கப்படும் விதத்திலும் அவற்றைக் கண்டுகளிக்கும் விதத்திலும் தொழில்நுட்பம் மாற்றம் கண்டிருக்கிறது. குறைந்த விலையிலான கணினி உள்ளீடுகள், திறன் கைபேசிகள், கையடக்கக் கணினிகள் ஆகியவற்றின் வருகையைத் தொடர்ந்து,  படங்களைப் பார்க்கும் விதத்திலும் தெளிவான மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இந்த மாற்றங்களை இந்தியத் திரைப்படத்துறை ஏற்றுக்கொண்டிருக்கிறது. இதில் நேரும் சவால்களை வாய்ப்புகளாக மாற்றும் உத்திகளைக் கண்டறியும் செயல்பாடு தொடரும். திரைப்படங்களை உருவாக்குவோர் பொருளாதாரம், தரம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குடியரசுத்தலைவர் கூறினார்.


(வெளியீட்டு அடையாள எண்: 1531363) வருகையாளர் எண்ணிக்கை : 233
இந்த வெளியீட்டை படிக்க: Marathi , Bengali , English