தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தங்களது தரவு மையத்தில் இருந்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்று ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, ஈ.பி.எஃப்.ஓ தெரிவித்துள்ளது
Posted On:
02 MAY 2018 4:15PM by PIB Chennai
தரவுப் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பொதுச் சேவை மையங்களின் சர்வர்கள் மற்றும் விருந்தோம்பல் சேவைகளை வைரஸ் சோதனைகள் நிறைவடையும் வரை நிறுத்தி வைத்து முன்கூட்டிய நடவடிக்கையை ஈ.பி.எஃப்.ஓ மேற்கொண்டுள்ளது. எவ்விதத் தகவலும் வெளியேறாமல் பாதுகாப்பதை உறுதிசெய்ய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஈ.பி.எஃப்.ஓ எடுத்து வருகிறது.
ஈ.பி.எஃப்.ஓ தகவல்கள் எளிதில் பாதிப்படையக்கூடியவை என்று சமூக ஊடகங்களில் வந்துள்ள செய்தி அடிப்படையில் பொதுச்சேவை மையங்களின் முதன்மை நிர்வாக அதிகாரிக்கு இத்தகைய குறைபாட்டை நீக்கக்கோரி கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.
தரவுகள் மற்றும் மென்பொருள் தொடர்பான பாதுகாப்பு எச்சரிக்கைகள் நிர்வாக நடைமுறையில் வழக்கமானவைதான் என்றும், இவற்றின் அடிப்படையில் பொதுச் சேவை மையங்களின் சேவைகள் 2018 மார்ச் 22 ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஈ.பி.எஃப்.ஓ தெரிவித்துள்ளது. இந்தச் செய்தி பொதுச் சேவை மையங்கள் மூலமான சேவைகள் தொடர்பானது என்றும், ஈ.பி.எஃப்.ஓ மென்பொருள் அல்லது தரவு மையம் சம்பந்தப்பட்டது அல்ல என்றும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை எவ்விதமான தகவலும் வெளியாகவில்லை, அவ்வாறு வெளியானதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் இல்லை.
எனவே, இந்தச் செய்திக் குறித்து கவலைப்படும்படியாக ஏதுமில்லை. ஈ.பி.எஃப்.ஓ தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. எதிர்காலத்திலும் தொடர்ந்து எச்சரிக்கையுடன் செயல்படும்.
(Release ID: 1531082)
Visitor Counter : 203