பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

சென்னை, லக்னோ, குவஹாத்தி விமான நிலையங்களின் அடிப்படை வசதி மேம்பாடு

சென்னை, லக்னோ, குவஹாத்தி விமான நிலையங்களின் மேம்பாடு மற்றும் விமான நிலைய அடிப்படை வசதி விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 02 MAY 2018 3:23PM by PIB Chennai

சென்னை, லக்னோ, குவஹாத்தி விமான நிலையங்களில் ஒருங்கிணைந்த முனையங்களை விரிவாக்கி மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. இந்த விமான நிலையங்கள் திட்டம் முறையே ரூ.2467 கோடி, ரூ.1383 கோடி, ரூ.1232 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். 

விவரங்கள்

சென்னை விமான நிலையம்- உத்தேச முனையக் கட்டிடத்திற்கு மொத்த கட்டுமானப் பகுதி பரப்பளவு  தற்போதுள்ள 197000 சதுர மீட்டர் பரப்பளவுக்கான  திட்டத்தையும் சேர்த்து  336000 சதுரமீட்டர் ஆகும். இதன்மூலம் இந்த முனையம் ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் பெறும்.  இந்த புதிய முனையக் கட்டிடத்தில் பசுமைக் கட்டிட அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.  இதன் மூலம் கிரிஹா-4 எனப்படும் ஒருங்கிணைந்த குடியிருப்பு மதிப்பீட்டு பசுமை தளத்தில் நட்சத்திர அந்தஸ்த்தை புதிய முனையம் பெறும்.  2026-27 ஆம் ஆண்டு வரை எதிர்பார்க்கப்படும் பயணியர் வருகை வளர்ச்சித் தேவையை சமாளிக்கும் வகையில் இந்தக் கட்டிடம் வடிவமைக்கப்படவுள்ளது.

சென்னை போன்ற இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையங்களில் புதிய திறனை உருவாக்கி வளர்ந்து வரும் விமான போக்குவரத்து அடிப்படை வசதி தேவையை சமாளிக்க இந்திய விமான நிலையங்கள் ஆணையம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் நடைமுறையை தொடங்கியுள்ளது.  சென்னை உட்பட 22 விமான நிலையங்களில் அடுத்த நான்கு அல்லது ஐந்தாண்டுகளுக்கு இதற்கென ரூ.20178 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.

அகர்தலா, கோழிக்கோடு, போர்ட்பிளேர் ஆகிய விமான நிலையங்களில் புதிய அதிநவீன ஒருங்கிணைந்த முனையங்கள் ஏற்படுத்துவதற்கான பணி ஆணைகளை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வழங்கியுள்ளது.  சென்னை, லக்னோ குவஹாத்தி விமான நிலையங்களின் மேம்பாடு மற்றும் விரிவாக்கப் பணிகளுக்கு  முறையே ரூ. 2467 கோடி, ரூ. 1383 கோடி, ரூ. 1232 கோடி மதிப்பீட்டில் திட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும் நிலையில் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தை பார்க்கவும்.



(Release ID: 1531062) Visitor Counter : 180


Read this release in: English , Marathi , Bengali