உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

மகாராஷ்டிரா மாநில விமானப் போக்குவரத்தை சிந்துதுர்க் விமான நிலையம் ஊக்குவிக்கும்

प्रविष्टि तिथि: 01 MAY 2018 1:38PM by PIB Chennai

சிந்துதுர்க் விமான நிலையப் பணிகளை வர்த்தகத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்

 

மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த ஆண்டு சிந்துதுர்க் மாவட்டம் பாருலேசிபி என்னும் இடத்தில் புதிய விமான நிலையம் தொடங்கப்பட உள்ளது இந்தத் திட்டத்திற்கான பணிகள், பருவமழை துவங்குவதற்கு முன்பாக, செப்டம்பரில் விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டங்களுக்கு முன்னதாக இந்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சிந்துதுர்க் விமான நிலையம் 200 புறப்பாட்டுப் பயணிகளையும் வருகைப் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டதாகும். எந்தவிதக் கூடுதல் கட்டுமானமும் இல்லாமல் நெரிசல் நேரங்களில் 400 புறப்பாட்டுப் பயணிகளுக்கும் 400 வருகைப் பயணிகளுக்கும் சேவை புரியும் வகையில் உருவாக்கப்படுகிறது. இந்த விமான நிலையம் உள்நாட்டுப் பயணிகளுக்கு சேவை புரிய ஏற்படுத்தப்பட்டுள்ளது என்ற போதிலும், சர்வதேச சுற்றுலா விமானங்களைக் கையாளும் வசதிகளைக் கொண்டதாகும்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் கொங்கன் பகுதிகள், கோவாவின் சில பகுதிகள், வடக்கு கர்நாடகா, மேற்கு மகாராஷ்டிரா ஆகியவற்றை இணைக்கும் சிறந்த  வான்வழித் தடமாக சிந்துதுர்க் விமான நிலையம் இருக்கும் என்பதால் இது மிகவும் அவசியமாகிறது.


(रिलीज़ आईडी: 1530850) आगंतुक पटल : 131
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , हिन्दी , Gujarati