நிதி அமைச்சகம்
2017-18-ஆம் நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி வருவாய் வசூல்
Posted On:
27 APR 2018 11:38AM by PIB Chennai
2017-18 ஆம் நிதியாண்டில், 2017 ஆகஸ்ட் முதல், 2018 மார்ச் முடிய ஜிஎஸ்டி வரிவிதிப்பின் வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூ.7.19 லட்சம் கோடியாகும். இதில் ரூ.1.19 லட்சம் கோடி மத்திய ஜிஎஸ்டி-யாகவும், ரூ.1.72 லட்சம் கோடி மாநில ஜிஎஸ்டி-யாகவும், ரூ.3.66 லட்சம் கோடி ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-யாகவும் வசூலிக்கப்பட்டது. (இறக்குமதி மீது வசூலான ரூ.1.73 லட்சம் கோடி இதில் அடங்கும்). ரூ.62,021 கோடி செஸ் மூலம் கிடைத்தது. (இறக்குமதி மீது ரூ.5,702 கோடி உட்பட). இந்த எட்டு மாதங்களில் சராசரி மாதாந்திர வசூல் ரூ.89,885 கோடியாகும்.
உள்நாட்டு விநியோகம் மீதான ஒரு மாதத்தின் விவரங்களைத் தாக்கல் செய்வதன் மூலமான வரி வசூல், அடுத்த மாதத்தில்தான் நிறைவடையும். ஆனால், இறக்குமதி மீதான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி மற்றும் செஸ் அதே மாதத்தில் வசூலாகிவிடும். அதனால் நடப்பு ஆண்டில் உள்நாட்டு விநியோகத்தின் மீதான வரி வசூல் 2017ஆகஸ்ட் முதல், 2018 மார்ச் முடிய எட்டு மாதங்களுக்குச் செய்யப்பட்டது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மற்றும் இறக்குமதி மீதான செஸ் ஆகியவை 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2018 மார்ச் முடிய ஒன்பது மாதங்களுக்கு வசூலிக்கப்பட்டுள்ளது. 2017 ஜூலை வசூல் உட்பட, 2017-18-ம் நிதியாண்டுக்கான மொத்த ஜிஎஸ்டி வசூல், தற்காலிகமாக ரூ.7.41 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கான வருவாய்
மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி வசூல் இந்தக் காலக்கட்டத்தில் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி உட்பட ரூ.2.91 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டில் எட்டு மாதக் காலத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட மொத்த இழப்பீடு ரூ.41,147 கோடியாகும். இது 2015-16-ஆம் ஆண்டின் வரிவசூலின் அடிப்படையில் மாநிலங்களின் வருவாய் 14 சதவீத அளவில் பாதுகாக்கப்பட வேண்டிய வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாநிலத்தின் வருவாய் இடைவெளி கடந்த எட்டு மாதங்களில் குறைந்துவந்துள்ளது. கடந்த ஆண்டின் அனைத்து மாநிலங்களின் சராசரி வருவாய் இடைவெளி 17 சதவீத அளவில் இருந்தது.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.
-----
(Release ID: 1530541)
Visitor Counter : 285