ஆயுஷ்

பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறைகளில் இந்தியாவுக்கும் சவோ டோமி மற்றும் பிரின்சிபி நாட்டுக்கு இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 25 APR 2018 1:19PM by PIB Chennai

பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறைகளில் இந்தியாவுக்கும் மற்றும் சவோ டோமி மற்றும் பிரின்சிபி நாட்டுக்கும் இடையே ஏற்கெனவே கையெழுத்திடப்பட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2018 மார்ச்சில் கையெழுத்திடப்பட்டது.

முக்கியத் தாக்கம்:

பாரம்பரிய மருத்துவ முறையில் இருநாடுகளுக்கு இடையே உள்ள இருதரப்பு ஒத்துழைப்பை இந்த ஒப்பந்தம் மேலும் வலுபடுத்தும். இரு நாடுகளின் கலாச்சார பாரம்பரியத்தின் பகிர்தலை வைத்துப் பார்க்கையில் இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும்.

நடைமுறைப்படுத்தும் உத்தி மற்றும் இலக்குகள்:

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நகலைப் பெற்றபின் இருதரப்புக்கு இடையேயும் செயல்முறைகள் தொடங்கும். கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வுஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள குறிப்புவிதிமுறைகள் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையே முன்முயற்சிகள் தொடங்கும். இந்த நடைமுறை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்முறையில் உள்ள வரை தொடரும்.

பின்னணி:

மருத்துவ மூலிகைகள் உட்பட நன்கு வளர்ந்த பாரம்பரிய மருத்துவ முறை பெற்ற ஆசிர்வதிக்கப்பட்ட நாடு இந்தியா. உலகச் சுகாதாரச் சூழலில் இதற்கு மிகப்பெரிய அளவில் சாத்தியக்கூறு உள்ளது.

ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, சோவா-ரிக்பா மற்றும் ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறையை ஊக்குவிக்கும், பரப்பும்,  உலகமயமாக்கும் கட்டாயக் கடமையை கொண்ட இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் மலேசியா, ட்ரினிடாட் – டோபாகோ, ஹங்கேரி, வங்காள தேசம், நேபாளம், மொரிஷியஸ், மங்கோலியா, இரான் உள்ளிட்ட நாடுகளுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து இந்தத் துறைகளில் உள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இலங்கையுடன் மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.  

----(Release ID: 1530187) Visitor Counter : 88


Read this release in: English , Telugu , Kannada