நித்தி ஆயோக்

அடல் புதிய இந்தியா சவால் திட்டத்தில் பங்கேற்க நித்தி ஆயோக் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

Posted On: 25 APR 2018 11:32AM by PIB Chennai

தேர்ந்தெடுக்கப்படும் நல்ல கருத்துக்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை நிதியுதவி, வழிகாட்டுதல் வழங்கப்படும்.

5 துறைகளின் பங்கேற்புடன் செயல்படுத்தப்படும் அடல் புதிய இந்தியா சவால் திட்டத்திற்காக, அடல் கண்டுபிடிப்பு இயக்கம், புதிய கண்டுபிடிப்பாளர்கள் / குறு, சிறு, நடுத்தரத் தொழில்முனைவோர் /  எழுமின் ஆர்வலர்கள் மூலம் சந்தைப்படுத்துவதற்கு ஏற்ற பொருட்கள் வடிவமைக்கப்படவுள்ளது. பருவநிலைக்கு உகந்த நவீன வேளாண்மை, நவீனப் போக்குவரத்துச் சாதனங்கள், வாகனப் பராமரிப்பு, கழிவு மேலாண்மை போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட 17 பிரிவுகளில் வெட்டு விளிம்புத் தொழில்நுட்பம் அல்லது முன்மாதிரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

திறமையுள்ள, ஆர்வமுள்ள மற்றும் உற்பத்திக்கு ஏற்ற தொழில்நுட்பத் தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும். மேலும், வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் வணிகமயமாக்கலுக்குத் தேவைப்படும் ஆதரவுகளை வழங்குவதுடன், உற்பத்திப் பொருளுக்கான சந்தை வாய்ப்புகளை அதிகப்படுத்துவதற்கும் உதவி செய்யப்படும்.

இதற்கென அடல் கண்டுபிடிப்பு இயக்கத்தின் கீழ், நித்தி ஆயோக் அமைப்பு, அடல் புதிய இந்தியா சவால் என்ற திட்டத்தை 2018 ஏப்ரல் 26 வியாழனன்று தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் நித்தி ஆயோக் துணைத்தலைவர் , திரு. ராஜீவ் குமார், மத்தியச் சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, கப்பல் மற்றும் நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கைப் புனரமைப்புத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, மத்திய வேளாண்  மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. ராதா மோகன் சிங், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு. ஹர்தீப்சிங் புரி, மத்தியக் குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை இணையமைச்சர் திரு எஸ் எஸ் அலுவாலியா, நித்தி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி திரு. அமிதாப் காந்த், அடல் கண்டுபிடிப்பு இயக்கத்தின் இயக்குநர் திரு. ராமநாதன் ரமணன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.



(Release ID: 1530182) Visitor Counter : 181


Read this release in: English , Urdu , Marathi , Hindi