பாதுகாப்பு அமைச்சகம்

சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 15வது பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் உரை

இடுகை இடப்பட்ட நாள்: 24 APR 2018 4:35PM by PIB Chennai

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் முதல்முறையாக இந்தியா பங்கேற்கிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 15வது பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்  சீனாவின் பீஜிங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்று பேசிய பாதுகாப்பு அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், பரந்து விரிந்த யூரேஷிய பிராந்தியத்துடன் கூட்டணியை விரிவுபடுத்த இந்தியா தீவிர விருப்பம் கொண்டிருப்பதாக கூறினார். இவ்வாறு செய்வதில் இந்தியா ரஷ்யாவுடன் நீடித்த ஆழமான பரஸ்பர நம்பிக்கை கொண்ட நீடித்த உறவு, மத்திய ஆசியாவுடனான துடிப்புமிக்க வரலாற்று மற்றும் கலாச்சார இணைப்புகள் மற்றும் சீனாவுடனான நெருக்கமான வளர்ச்சிக் கூட்டணியையும் அனைத்து உறுப்பு நாடுகளுடனான பரஸ்பர பலனளிக்கும் உறவுகளை விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும் விரும்புகிறது.

வரும் காலங்களில் இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன்  உள்ள பழமையான நட்புக்கு சக்தியும் ஊக்கமும் அளிக்கும் வகையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பங்குதாரர்களுடன் இந்தியா இணைந்து செயல்படும் என்று திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார்.

பிராந்தியத்தில் உள்ள உறுப்பு நாடுகள் மற்றும் பரவலான சர்வதேச அடிப்படையில் அதிக தொடர்பை விரிவுபடுத்துவதற்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளை அவர் கேட்டுக் கொண்டார்.

பருவநிலை மாற்றம், சைபர் பாதுகாப்பு, போதை மருந்து கடத்தல் அல்லது நாடு கடந்த வன்முறை போன்றவற்றுக்கு கூட்டுறவு கட்டமைப்பு அடிப்படையில் தீர்வுகள் தேவைப்படுவதாகவும், இதில் அனைத்து நாடுகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் ஈடுபாடு தேவைப்படுவதாகவும் பாதுகாப்பு அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார். எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் என்ற தொடர் அச்சுறுத்தலுக்கு இது குறிப்பான தேவையாகும்.

பயங்கரவாதம் மீது சகிப்புத்தன்மை அற்ற கொள்கையை கடைப்பிடிக்க உறுப்பு நாடுகள் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட அவர் அழைப்பு விடுத்தார். பயங்கரவாத குழுக்கள் அல்லது அமைப்புகளுக்கு பொருளுதவி அளிப்பது அல்லது வேறு உதவிகளை அளிப்பதை இனியும் சகித்துக் கொள்ள முடியாது என அவர் கூறினார்.

ஆயுதப்படைகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறிப்பாக விரிவுபடுத்தப்பட்ட இணைப்பு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கான முக்கிய அளவிடாக இருப்பதால், இந்த ஈடுபாட்டின் முழு வாய்ப்புகளை ஆய்வு செய்வதில் இந்தியா தீவிரத்துடன் இருப்பதாக திருமதி சீதாராமன் தெரிவித்தார்.

ரஷ்யாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அமைதி முயற்சிகள், கூட்டு ராணுவ பயிற்சிகளில் இந்தியா பங்கேற்கும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.


(வெளியீட்டு அடையாள எண்: 1530095) வருகையாளர் எண்ணிக்கை : 205
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi , Malayalam