பிரதமர் அலுவலகம்
புவி தினத்தையொட்டி, மேம்பட்ட கிரகத்தை உருவாக்குவது என்ற உறுதிமொழியைப் பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்
Posted On:
22 APR 2018 9:53AM by PIB Chennai
புவிதினத்தையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், எதிர்காலத் தலைமுறையினருக்காக, மேம்பட்ட கிரகத்தை உருவாக்குவதென்ற உறுதிமொழியைப் பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் களை நாம் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என்றும், இதுவே நமது பூமித் தாய்க்கு நாம் செலுத்தும் சிறந்த மரியாதையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இயற்கையுடன் நல்லுறவை மேம்படுத்தி, நீடித்த வளர்ச்சியை உறுதி செய்ய பாடுபட்டுவரும் அனைத்து தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
(Release ID: 1529900)