நிதி அமைச்சகம்
‘நகர்ப்புற மேம்பாடு: தொழில்நுட்பத் தீர்வுகள் மற்றும் நிர்வாகச் சவால்கள் குறித்த இரண்டு நாள் மாநாடு நிறைவு
प्रविष्टि तिथि:
20 APR 2018 3:43PM by PIB Chennai
'நகர்ப்புற மேம்பாடு:தொழில்நுட்பத் தீர்வுகள் மற்றும் நிர்வாகச் சவால்கள்’ என்ற தலைப்பிலான இரண்டு நாள் பிராந்திய மாநாடு குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இன்று நிறைவடைந்தது. இந்த மாநாட்டை அசோகாம் அமைப்பின் குஜராத் கிளை, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சுயாட்சி ஆராய்ச்சி அமைப்பான வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து நிதித்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது.
இரண்டு நாள் மாநாட்டின் நிறைவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் நிறைவுரை ஆற்றிய முன்னாள் மத்திய மின்சாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் ஒய்.கே.அலக் மற்றும் குஜராத் மத்திய பல்கலைக்கழக வேந்தர் ஆகியோர், கொள்கை உருவாக்குவோர் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையைப் பொருத்தவரையில் மேலிருந்து கீழ் அணுகுமுறைக்குப் பதிலாக அடிமட்டத்திலிருந்து மேல்நோக்கிச் செல்லும் அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்கள்.
********
(रिलीज़ आईडी: 1529764)
आगंतुक पटल : 187