சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
கட்டுமானம் மற்றும் பணி அளித்தலுக்கான இலக்குகளை சாலை அமைச்சகத்திற்கு திரு நிதின் கட்கரி நிர்ணயித்துள்ளார்.
இந்த ஆண்டு தேசிய நெடுஞ்சாலையில்16000 கி.மீ. தூரத்திற்கு சாலை அமைக்கப்படவுள்ளது. இந்தப் பணி அளிப்பு தேசிய நெடுஞ்சாலைப் பணிகளில் 25 சதவீதம் அதிகமாகும்.
Posted On:
17 APR 2018 5:52PM by PIB Chennai
நடப்பு ஆண்டில் (2018-19) தேசிய நெடுஞ்சாலைகளில் சுமார் 20,000 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பணிகள் வழங்க சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்து, நீர்வளம், நதி மேம்பாடு, கங்கை புனரமைப்புத்துறைகளுக்கான மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 2017-18 ல் அமைச்சகத்தால் 8,652 கிலோ மீட்டர் என்.ஹெச்.ஏ.ஐ மூலம் 7,397 கிலோ மீட்டர் என்.ஹெச்.ஐ.டி.சி.எல். மூலம் 1,006 என மொத்தம் பணி அளிக்கப்பட்ட 17,055 கிலோ மீட்டரைவிட இது 25 சதவீதம் அதிகமாகும்.
2018-19 க்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 16,420 கி.மீ. தூர சாலை அமைப்பில் 9,700 கி.மீ. சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தாலும் 6,000 கி.மீ. என்.ஹெச்.ஏ.ஐ. மூலமும் 720 கி.மீ. என்.ஹெச்.ஐ.டி.சி.எல் மூலமும் அமைக்கப்படும். 2017-18 ல் 9,829 கி.மீ. தூர தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. சென்ற ஆண்டு ஒரு நாளைக்கு 27 கி.மீ. தூர சாலை அமைப்பு என்ற இலக்கிற்கு மாறாக இந்த ஆண்டு ஒரு நாளைக்கு 45 கி.மீ. என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள நெடுஞ்சாலைகள் ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் தமது அமைச்சகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருப்பதாக திரு கட்கரி கூறினார்.
திரு. கட்கரி இன்று (17.04.2018) நடத்திய தமது அமைச்சக அதிகாரிகளின் கூட்டத்தில் மாநில வாரியான திட்டங்கள் பற்றி ஆய்வு செய்யப்பட்டது.
(Release ID: 1529422)