ஜவுளித்துறை அமைச்சகம்
தூய்மை இயக்கத்தை மக்கள் இயக்கமாக்க ஜவுளி அமைச்சகம் முயற்சி – அஜய் தம்தா
प्रविष्टि तिथि:
11 APR 2018 2:29PM by PIB Chennai
மும்பை பிரபாதேவி கடற்கரையில், மும்பை ஜவுளிக்குழு தூய்மை இயக்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. 2018 மார்ச் 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடந்த சிறப்புத் தூய்மை இருவார விழாவில், மும்பை மக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். இந்த இயக்கத்தின்போது, பத்து டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு அஜய் தம்தா இதனைத் தெரிவித்தார். இந்தச் சிறப்பு இருவார விழாவுடன், இந்த ஆண்டு முழு வதும் தன்னார்வத் தூய்மை செயல்பாட்டாளர்களைத் தொடர்ச்சியாகத் தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் திரு.தம்தா தெரிவித்தார்.
---
(रिलीज़ आईडी: 1528640)
आगंतुक पटल : 160