குடியரசுத் தலைவர் செயலகம்
இந்தியா - ஈக்யுடோரியல் கினியா குடியரசுத் தலைவர்களின் கூட்டறிக்கை
प्रविष्टि तिथि:
09 APR 2018 11:26AM by PIB Chennai
ஈக்யுடோரியல் கினியா குடியரசுத் தலைவர் திரு டியோடோரா ஓபியாங் இன்குயெம் இம்போசோகோ அழைப்பின் பேரில் குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் 2018 ஏப்ரல் 7 முதல் 9 வரை ஈக்யுடோரியல் கினியாவில் அரசுமுறைப்பயணம் மேற்கொண்டார்.
இந்தப் பயணத்தின் இறுதியில் இரு குடிரயசுத் தலைவர்களும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் சாரம்:
மாலாபோ விமான நிலையத்தில் குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்துக்கு ஈக்யுடோரியல் கினியா குடியரசுத் தலைவர் தலைமையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
இரு குடியரசுத் தலைவர்களும் 2018 ஏப்ரல் 8-ம் தேதி இருதரப்பு பேச்சுக்களை நடத்தினார்கள். தொடர்ந்து இரண்டு குழு நிலைப் பேச்சுக்களிலும் அவர்கள் பங்கேற்றனர்.
குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், ஈக்யுடோரியல் கினியாவின் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
ஐ .நா. பாதுகாப்புச் சபைக்கு முதல்முறையாக நிரந்தரமில்லாத உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஈக்யுடோரியல் கினியாவுக்குப் பாராட்டுக்களை திரு ராம்நாத் கோவிந்த் தெரிவித்துக்கொண்டார்.
நீண்டகாலமாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் சிறப்பான உறவுகளை வலுப்படுத்தி, பொருளாதார, வர்த்தக, தொழில்நுட்ப , கல்வி, விவசாயம், அறிவியல், பண்பாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இருதரப்பும் உறுதியளித்தது.
பயங்கரவாதம் மனிதகுலத்திற்கும், உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் என்று குறிப்பிட்ட இரு தலைவர்களும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகள் அவசியம் என்று வலியுறுத்தினார்கள். ஐ.நா.வில் இந்தியா முன்வைத்துள்ள சர்வதேசப் பயங்கரவாதம் பற்றிய விரிவான உடன்பாட்டை விரைவாக நிறைவேற்றுவதற்கு ஈக்யுடோரியல் கினியா குடியரசுத் தலைவர் தமது ஆதரவைத் தெரிவித்தார். ஐ.நா, பாதுகாப்புச் சபையை சீர்த்திருத்தி அமைக்க வேண்டியதன் அவசிய அவசரத்தை அவர்கள் வலியுறுத்தினார்கள்.
இருதரப்பு விஷயங்களில் முறையான இருதரப்புக் கூட்டங்களை நடத்ததுவதற்கு அவர்கள் ஒப்புதல் அளித்தனர்.
விவசாயம், சுரங்கப்பணிகள், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈக்யுடோரியல் கினியாவில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்று இரு குடியரசுத் தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர்.
ஈக்யுடோரியல் கினியாவில் தொழில்முனைவுத் திறன் மேம்பாடு மற்றும் தொழில் பயிற்சி மையமும் ஆங்கில மொழிப் பயிற்சிச் சோதனைக் கூடமும் இந்தியாவின் சார்பில் அமைக்கப்படும் என்று திரு.ராம்நாத் கோவிந்த் அறிவித்ததற்கு ஈக்யுடோரியல் கினியாவின் குடியரசுத் தலைவர் நன்றி தெரிவித்தார்.
இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த அமைச்சர்கள் நிலை பரிவர்த்தனை பயணங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று இருதரப்பும் ஒப்புக்கொண்டது.
தமது பயணத்தின் போது அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பு உபசாரத்திற்குக் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இந்தியா, ஈக்யுடோரியல் கினியா குடியரசுத்தலைவர்களின் முழுக் கூட்டறிக்கைக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.
-------
(रिलीज़ आईडी: 1528375)
आगंतुक पटल : 174