பிரதமர் அலுவலகம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்

Posted On: 08 APR 2018 11:47AM by PIB Chennai

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பளுதூக்கும் வீர்ர்கள், வீராங்கனைகளுக்குப் பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர், “ராகல வெங்கட் ராகுல் தங்கப்பதக்கம் வென்றது பெருமிதத்துக்குரியது. பளுதூக்கும் வீர்ர்கள், வீராங்கனைகளின் அளப்பரிய வெற்றி பளுதூக்குதலை விரும்பி ஏற்க அதிகமான இளைஞர்களுக்கு ஊக்கச்சக்தியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

மகளிருக்கான 69 கிலோகிராம் பளுதூக்குதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற பூனம் யாதவை இந்தியா பாராட்டுகிறது. பளுதூக்குதலில் அவரது அர்ப்பணிப்பு உண்மையிலேயே வியக்கத்தக்கதாகும்” என்று கூறியுள்ளார்.

துப்பாக்கி சுடும் வீர்ர்கள், வீராங்கனைகளைப் பாராட்டியுள்ள பிரதமர், “2018-ம் ஆண்டின் காமன்வெல்த் போட்டிகளில் நமது நாட்டின் துப்பாக்கிச்சுடும் வீர்ர்களும், வீராங்கனைகளும் சிறந்து விளங்குகின்றனர். மனு பாக்கர் தனது மிகச் சிறந்த திறனைத் தொடர்ந்து வெளிப்படுத்தி மகளிருக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

மகளிருக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் ஹீனா சித்து வெள்ளிப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது பாராட்டுக்கள். அவரின் எதிர்காலச் செயல்பாடுகளுக்கு நல்வாழ்த்துக்கள்.

நம்பிக்கை அளிக்கும் துப்பாக்கிச் சுடும் வீர்ர் ரவிக்குமார் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அவரது வெற்றி குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கிறார்கள். துப்பாக்கிச்சுடும் இந்த இளம் வீர்ர், விளையாட்டுத் துறைக்கு வளமான பங்களிப்பைச் செய்திருக்கிறார்” என்றும் கூறியுள்ளார்.

 


(Release ID: 1528330) Visitor Counter : 179


Read this release in: English , Hindi , Marathi , Assamese