நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்

2018-ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைந்தது

Posted On: 06 APR 2018 2:06PM by PIB Chennai

2018-ம் ஆண்டு ஜனவரி 29-ந் தேதி திங்கட்கிழமை தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 2018 ஏப்ரல் 6-ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இரு அமர்வுகளாக நடந்த இந்தக் கூட்டத் தொடரின் முதல் பகுதி 2018 பிப்ரவரி 9-ந் தேதி வெள்ளிக்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.  23 நாள் இடைவெளிக்கு பின் 2018 மார்ச் 5-ந் தேதி இரு அவைகளும் மீண்டும் கூடியது.  பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மானியக் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட நிலைக்குழுக்கள் ஆய்வு செய்வதற்காக இந்த அமர்வு தொடங்கியது.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை மற்றும் ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு.அனந்த் குமார், பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வில் மக்களவை 7 நாட்களும், மாநிலங்களவை 8 நாட்களும் நடைபெற்றதாக கூறினார். 2-வது அமர்வின் இரு அவைகளும் 22 நாட்கள் நடைபெற்றதாக அவர் தெரிவித்தார். 2018-ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் மக்களவை 29 நாட்களும், மாநிலங்களவை 30 நாட்களும் நடந்ததாக அவர் கூறினார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர்கள் திரு. விஜய் கோயல், திரு. அர்ஜூன் மெக்வால் ஆகியோர் உடனிருந்தனர்.

16-வது மக்களவையின் 14-வது கூட்டத் தொடர் மற்றும் மாநிலங்களவையின் 245-வது கூட்டத் தொடரில் மேற்கொள்ளப்பட்ட அலுவல்கள் (பட்ஜெட் கூட்டத் தொடர் 2018)

  1. மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட மசோதாக்கள்.
  1. நிதி மசோதா 2018
  2. நிதி ஒதுக்கல் (எண்.2) மசோதா 2018
  3. நிதி ஒதுக்கல் (எண்.3) மசோதா 2018
  4. சீட்டு நிதி (திருத்த) மசோதா 2018
  5. தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் மசோதா 2018

II மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்.

  1. நிதி மசோதா 2018
  2. நிதி ஒதுக்கல் (எண்.2) மசோதா 2018
  3. நிதி ஒதுக்கல் (எண்.3) மசோதா 2018
  4. பணிக்கொடை (திருத்த) மசோதா 2018
  5. குறிப்பிட்ட நிவாரண (திருத்த) மசோதா 2018

III மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்

  1 .பணிக்கொடை (திருத்த) மசோதா 2018

IV நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்/ இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதாக கருதப்படுபவை.

  1. நிதி மசோதா 2018
  2. நிதி ஒதுக்கல் (எண்.2) மசோதா 2018
  3. நிதி ஒதுக்கல் (எண்.3) மசோதா 2018
  4. பணிக்கொடை (திருத்த) மசோதா 2018

 மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாக்கள் மாநிலங்களவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு 14 நாட்கள் கழிந்த நிலையில், 29.03.2018 அன்று அரசியல் சாசனத்தின் 109-வது பிரிவு உட்பிரிவு 5-ன்படி நிறைவேற்றப்பட்டதாக கருதப்படும்.

 


(Release ID: 1528179) Visitor Counter : 184
Read this release in: English , Hindi , Marathi