மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

இ-கற்றல் மேம்பாடு

Posted On: 05 APR 2018 7:09PM by PIB Chennai

பள்ளி மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்களிடையே இ-கற்றல் முறையை மேம்படுத்துவதற்கான மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொண்டு வரும் முக்கிய இ-கற்றல் முயற்சிகள் வருமாறு:

 (i) ஸ்வயம்: ஆர்வம் கொண்ட இளம் சிந்தனையாளகளுக்கான தீவிர கற்றல் இணையம் (ஸ்வயம்) ஆன்லைன் படிப்புக்கான ஒருங்கிணைந்த மேடை.

(ii) ஸ்வயம் பிரபா: டி.டீ.ஹெச் (டைரக் டு ஹோம்) மூலம் 32 உயர் தர கல்வி அலைவரிசைகளை அளிக்கும் முயற்சி ஸ்வயம் பிரபா.

(iii) தேசிய டிஜிட்டல் நூலகம்:

(iv) இ-பாடசாலை: 2017 நவம்பர் 23ம் தேதி ஜி.சி.சி.எஸ். 2017ன் போது பிரதமரால் அறிமுகம் செய்யப்பட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.), கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மாநில கவுன்சில் (எஸ்.சி.இ.ஆர்.டி.) உருவாக்கிய இ-புத்தக ஆதார வளங்கள்.

(v) திறந்தவெளி கல்வி ஆதாரங்களின் தேசிய தொகுப்பு: ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு டிஜிட்டல் கற்றல் தொகுப்புகள் இலவசமாகவும் வெளிப்படையாகவும் கிடைக்கச் செய்வது.

கடந்த மூன்று நிதி ஆண்டுகளில், மொத்தம் ரூ. 267.64 கோடி ஸ்வயம், ஸ்வயம் பிரபா, தேசிய டிஜிட்டல் நூலகம் மற்றும் திறந்தவெளி கற்றல் ஆதாரங்களுக்கான தேசிய களஞ்சியத்திற்காக செலவிடப்பட்டுள்ளது.

****


(Release ID: 1528125) Visitor Counter : 213
Read this release in: Urdu , English