மத்திய அமைச்சரவை
இந்தியப் போட்டித் திறன் ஆணையத்தைச் சீரமைக்க மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்
Posted On:
04 APR 2018 7:20PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் இந்தியப் போட்டித் திறன் ஆணையத்தில் (CCI) இடம்பெறுவோரின் எண்ணிக்கையைச் சீர்திருத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த ஆணையத்தில் ஒரு தலைவர் ஆறு உறுப்பினர்கள் என மொத்தம் ஏழு பேர் நியமிக்கப்படுவர். இதற்கு மாறாக, ஒரு தலைவர் மூன்று உறுப்பினர்கள் என மொத்தம் நான்கு பேரை மட்டுமே நியமிக்க இந்த சீரமைப்பு வழிசெய்கிறது. தற்போதைய ஆணையத்தில் காலியாகும் இரு உறுப்பினர்களின் பதவி நிரப்பப்பட மாட்டாது. மேலும், ஒரு கூடுதல் பதவியில் இருப்பவரின் பதவிக் காலம் வரும் 2018, செப்டம்பரில் நிறைவடைகிறது. அத்தோடு அந்தக் காலியிடத்திலும் யாரும் நியமிக்கப்பட மாட்டார்கள்.
பலன்கள்:
“குறைந்த அரசு, நிறைந்த ஆளுகைத் திறன்” என்பது அரசின் முக்கியக் குறிக்கோள்களில் ஒன்றாகும். அதன்படி, குறைவான ஆட்களைக் கொண்டு திறமையான நிர்வாகத்தை அளிப்பதே நோக்கம். இதனடிப்படையில் போட்டித் திறன் ஆணையத்தின் பதவியிடங்களில் மூன்று இடங்கள் குறைக்கப்படுகின்றன.
நாட்டில் வெவ்வேறு துறைகள், குழுக்களை இணைப்பது, ஒன்று சேர்ப்பது ஆகிய பணிகளை எளிமையாக்க உதவும் வகையில் அரசின் குறிக்கோள்களின்படி 2017ம் ஆண்டில் குறைப்பு (de minimis) முடிவை அமைச்சகம் எடுத்தது. அவ்வாறு துறைகளைச் சேர்த்தல், அவற்றின் சொத்துகளை மதிப்பிடும் வழிமுறைகள், சேர்க்கப்பட்டபின் நிர்ணயிக்கப்படும் விற்றுமுதல் இலக்கு ஆகிய அனைத்துக்கும் இந்த முடிவு பொருந்தும். இவ்வாறு ஒருங்கிணைவதை அடுத்து ஆணையத்திடம் நிறுவனங்கள் சமர்ப்பிக் க வேண்டிய தாக்கீதுகளைக் குறைக்கவும், ஆணையத்தின் சுமையைக் குறைக்கவும் வகை செய்யும். இது குறித்த பைசல் நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும் வழி ஏற்படும். இது நிறுவனங்களின் வணிகச் செயல்பாடுகளை விரைந்து மேற்கொள்ள துணைபுரியும். இதனால் அதிக வேலைவாய்ப்பு உருவாகும்.
அமைச்சரவையின் ஒப்புதலை அடுத்து, அரசாங்கத்தின் முக்கிய இலக்கான “குறைந்த ஆட்சி, நிறைந்த ஆளுகைத் திறன்” என்ற குறிக்கோளை எட்டும் வகையில் போட்டித் திறன் ஆணையத்தின் (CCI) பதவிகளின் எண்ணிக்கை குறையும்.
பின்னணி:
போட்டித் திறன் சட்டத்தின் (2002) 8(1) ஆவது பிரிவு ஆணையத்திற்கு ஒரு தலைவர் மற்றும் இருவருக்குக் குறையாத, ஆறு பேருக்கு மிகாத அளவு உறுப்பினர்கள் நியமிக்கப்படவும் வகை செய்கிறது. தற்போது ஆணையத்திற்கு ஒரு தலைவரும், நான்கு உறுப்பினர்களும் உள்ளனர்.
ஆரம்பத்தில் ஆணையத்திற்கு ஒரு தலைவர் மற்றும் பத்துக்கு மிகாத அளவு உறுப்பினர்கள் இடம்பெறுவதற்கு சட்டம் வழியமைத்தது. முதன்மை ஆயம் (Principal Bench), மத்திய அரசு அறிவுறுத்தியபடி, தலா இரு உறுப்பினர்கள் கொண்ட ஒரு கூடுதல் ஆயம் அல்லது தலா இருவர் கொண்ட இணைக்கப்பட்ட கூடுதல் பெஞ்ச் இடம்பெற வகை செய்யப்பட்டிருந்தது. இந்த போட்டித் திறன் ஆணையத்தின் (2007) திருத்திய சட்டத்தின் (2007) 39ஆவது பிரிவின் படி சட்டத்தின் 22ஆவது பிரிவு திருத்தப்பட்டு, பெஞ்ச் (ஆயம்) அமைவது ரத்து செய்யப்பட்டது. அதே சமயம் ஒரு தலைவர் இரு உறுப்பினர்களைக் கொண்ட போட்டித் திறன் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (Competition Appellate Tribunal) உருவாக்கப்பட்டது. இதனால், ஆணையத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கைத் தாமாகவே குறைந்துவிட்டது. ஒரு தலைவர் இருவருக்குக் குறையாத, ஆறு பேருக்கு மிகாத உறுப்பினர்கள் இடம்பெறவேண்டும் என்று மாற்றப்பட்டது.
போட்டித் திறன் ஆணையம் தொடக்க காலத்திலிருந்தே தொகுப்பமைவு (collegium) போல செயல்பட்டுவந்தது. ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் போட்டித் திறனுக்கான அமைப்புகள் குறைவான எண்ணிக்கையோடு திறன்பட செயல்படுகின்றன என்றும் சுட்டிக் காட்டப்பட்டது.
******
(Release ID: 1527786)
Visitor Counter : 224