மத்திய அமைச்சரவை

வர்த்தக தீர்வு நடவடிக்கைகளுக்காக வல்லுநர் குழுவை அமைக்க இந்தியா - ஈரான் இடையே புரிந்துணர்வு உடன்பாட்டை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 04 APR 2018 7:25PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், வர்த்தக தீர்வு நடவடிக்கைகளுக்காக வல்லுநர் குழுவை அமைக்கும் வகையில், இந்தியா மற்றும் ஈரான் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த உடன்படிக்கை, பரஸ்பரம் நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டது. ஈரான் அதிபர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது, பிப்ரவரி 17, 2018-ல் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்தானது.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை, வர்த்தக தீர்வுப் பிரிவில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை ஊக்குவிக்கும். இதன்படி, தகவல் பரிமாற்றம், திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள், பதுக்கலைத் தடுத்தல் மற்றும் பதுக்கலைத் தடுப்பதற்காக இறக்குமதி பொருட்களுக்கு தீர்வை விதிப்பது தொடர்பான விசாரணைகளில் ஒத்துழைப்பு போன்றவை மேற்கொள்ளப்படும்.

********


(रिलीज़ आईडी: 1527775) आगंतुक पटल : 149
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , Assamese , Gujarati