பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் பெயரில் போலியான லெட்டர் ஹெட்கள்
प्रविष्टि तिथि:
27 MAR 2018 2:27PM by PIB Chennai
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி மேனகா காந்தி பெயரில் போலியான லெட்டர் ஹெட்கள் உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் இரண்டு கால்நடை கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கால்நடைகளை சட்டவிரோதமாக கடத்திய அவர்கள் இருவரும் உள்ளூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளின் போலியான லெட்டர் ஹெட்கள், சீல் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தனிநபர்கள் அல்லது அமைப்புகளுக்கு தாம் எந்தக் கடிதமும் அளிக்கவில்லை எனக் கூறியுள்ள திருமதி மேனகா காந்தி, அவர்களின் சட்ட விரோதமான செயல்கள் குறித்து கடும் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
***
(रिलीज़ आईडी: 1526588)
आगंतुक पटल : 132