நிதி அமைச்சகம்
                
                
                
                
                
                
                    
                    
                        2018 மார்ச் 29,30 மற்றும் 31 தேதிகளில் வருமான வரி அலுவலகங்கள் செயல்படும்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                27 MAR 2018 12:39PM by PIB Chennai
                
                
                
                
                
                
                2016-17 மற்றும் 2017-18 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான தாமதிக்கப்பட்ட வருமான வரி கணக்கு மற்றும் 2016-17ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2018 மார்ச் 31 ஆகும். 2017-18 நிதி ஆண்டு நிறைவடையும் 2018 மார்ச் 31ம் தேதி சனிக்கிழமை ஆகும். 2018 மார்ச் 29 மற்றும் 30 தேதிகளும் விடுமுறை நாட்களாகும். 
இருப்பினும் வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்யவும் அத்துடன் தொடர்புடைய பணிகளை நிறைவேற்றவும் வசதியாக இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வருமான வரித்துறை அலுவலகங்களும் 2018 மார்ச் 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் செயல்படும். இந்த நாட்களில் வருமான வரி சேவை மையங்களும் திறந்திருக்கும். வரி செலுத்துவோர் தங்கள் கணக்குகளை தாக்கல் செய்ய தேவையான உதவிகளை அளிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
                
                
                
                
                
                (Release ID: 1526531)
                Visitor Counter : 132