ரெயில்வே அமைச்சகம்
சொத்துக்களைக் கண்காணிக்கவும், பராமரிக்கவும், நிர்வகிக்கவும், ஜிஐஎஸ் இணையதளத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது இந்திய ரயில்வே
பரஸ்பர ஒத்துழைப்புக்காக ரயில்வே அமைச்சகத்திற்கும், இஸ்ரோவுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இடுகை இடப்பட்ட நாள்:
22 MAR 2018 11:44AM by PIB Chennai
நிலச் சொத்துக்கள் உட்பட ஏராளமான சொத்துக்களை இந்திய ரயில்வே கொண்டுள்ளது. இவற்றைத் தீவிரமாகக் கண்காணிக்கவும், நிர்வகிக்கவும், பராமரிக்கவும் வேண்டிய அவசியம உள்ளது. மிகவும் பரவலான வெளிகளில் ரயில்வே செயல்படுவதால், இந்திய ரயில்வேயின் சொத்துக்களை ஜிஐஎஸ் முறையில் வரைபடமாக்குவது சிறந்த நிர்வாகத்திற்குப் பயன்படும்.
அகில இந்திய ரயில்வேயின் சொத்துக்கள் அனைத்தும் வரைபடமாக்கப்பட்டு , இவற்றை இந்திய ரயில்வேயின் ஜிஐஎஸ் இணையதளத்தை மேம்படுத்தப் பயன்படும். நிலச் சொத்துக்கள் உள்ளிட்ட இந்திய ரயில்வேயின் சொத்துக்களை ஜிஐஎஸ் நடைமுறையைப் பின்பற்றி, ஜிபிஎஸ் அடிப்படையில் வரைபடமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி, 2018-டிசம்பர் வாக்கில் முடிவடையக்கூடும். இதுதொடர்பாக, ரயில்வே தகவல்முறைக்கான மையத்துடன் (சிஆர்ஐஎஸ்) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் பயன்பாட்டை சிஆர்ஐஎஸ் மேம்படுத்துகிறது. இந்தப் பயன்பாட்டின் மூலம், இந்திய ரயில்வேயின் நில வரைபடங்களை செயற்கைக்கோள் வரைபடத்தின்வழி காணலாம். செயற்கைக்கோள் வரைபடங்களை இஸ்ரோவின் புவன் தளத்திலிருந்து பெறமுடியும். பல்வேறு கட்டங்களில் பரஸ்பர ஒத்துழைப்புக்காக ரயில்வே அமைச்சகத்திற்கும், இஸ்ரோவுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஜிஐஎஸ் இணையதளத்தை உருவாக்கிய பின், இஸ்ரோவால் தொடர்ச்சியான இடைவெளியில் தரப்படும் செயற்கைக்கோள் வரைபடங்களோடு ஒப்பிட்டு, ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள புதிய ஆக்கிரமிப்புகளை அடையாளம் காண்பது சாத்தியமாகும்.
---------
(வெளியீட்டு அடையாள எண்: 1525863)
வருகையாளர் எண்ணிக்கை : 139