தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

பத்திரிகையாளர் நலத்திட்டக்குழுவும் மத்திய பத்திரிகையாளர் அங்கீகாரக் குழுவும் மாற்றியமைப்பு

பத்திரிகையாளர் நலத்திட்டக்குழுவில் முதல் முறையாக பத்திரிகையாளர்கள் உறுப்பினர்களாக சேர்ப்பு,

Posted On: 21 MAR 2018 2:50PM by PIB Chennai

பத்திரிகையாளர் நலத்திட்டக்குழுவையும் மத்திய பத்திரிகையாளர் அங்கீகாரக் குழுவையும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் மாற்றியமைத்துள்ளது. பத்திரிகையாளர் நலத்திட்டக்குழுவில் முதல் முறையாக பத்திரிகையாளர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

   மத்திய பத்திரிகையாளர் அங்கீகாரக்குழுவுக்கு பத்திரிகை தகவல் அலுவலக முதன்மைத் தலைமை இயக்குநர் தலைவராக இருப்பார். இந்தியப் பத்திரிகை கவுன்சில் பிரதிநிதியும், ஒலிப்பரப்பாளர் சங்கத்தின் பிரதிநிதியும் இதில் இடம் பெறுகிறார்கள். திரு பிரஷாந்த் மிஸ்ரா - டைனிக் ஜாக்ரான், திருமதி நவிகா குப்தா-டைம்ஸ் நவ், திரு கஞ்சன் குப்தா - ஏ பி பி செய்திப்பிரிவு பிரதிநிதி, திரு ஜே கோபிகிருஷ்ணா - பயோனியர், திருமதி சுமிதா பிரகாஷ்- ஏ என் ஐ ஆகியோர் இதர உறுப்பினர்கள். இந்த உறுப்பினர்களின் பதவிக்காலம்  இரண்டு ஆண்டுகள். காலாண்டுக்கு ஒருமுறையோ அல்லது அடிக்கடியோ கூடுவார்கள்.

 

 

பத்திரிகையாளர் நலத்திட்டக்குழு திறம்பட செயல்படுவதற்காக அதன் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இப்போது தகவல் ஒலிபரப்புத்துறை செயலாளரும், ஊழியர் நலம் மற்றும் நிர்வாகப் பிரிவு இணைச்செயலர்,  பத்திரிகை தகவல் அலுவலக முதன்மை தலைமைச் செயலர் ஆகியோர் அதிகார நிமித்தம் உறுப்பினர்களாக இருப்பார்கள். முதன் முறையாக பத்திரிகையாளர்களும், இந்தக் குழுவில் உறுப்பினர்களாக  இணைக்கப்பட்டுள்ளார்கள்.   திரு விகாஸ் பதாரியா, திருமதி ரிச்சா அனிருத், திரு அசோக் உபாத்யாயா, திரு சுஜித் தாக்கூர், செல்வி சிப்ரா தாஸ், திரு ரவீந்தர் சிங் ஆகியோர் அதிகார நிமித்தமல்லாத உறுப்பினர்களாக பத்திரிகையாளர் நலக்குழுவில் இடம் பெற்றுள்ளார்கள். இப்படி அதிகார நிமித்தமல்லாத உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள்.  பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் குறிப்பிட்ட காலவரம்புக்குள் உரிய நேரத்தில் ஆதரவு பெற இந்த முயற்சி  உதவும்.

   குழு அமைப்பு மற்றும் திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டு நெறிகள் பற்றிய  மேலும் விவரங்களுக்கு http://mib.gov.in/sites/default/files/JWS%20New%20guidelines_0.pdf   இணையதளத்தை அணுகவும்.

பத்திரிகையாளர் நலத்திட்ட பின்னணி

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம், பத்திரிகையாளர்கள் நலத்திட்ட உதவியை ஐந்து மடங்கு உயர்த்தியுள்ளது.  2017-18-ம் ஆண்டில் ரூ.20 லட்சமாக இருந்த ஒதுக்கீடு 2018-19-ம் ஆண்டின்  ஒரு கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் மிகப் பெரும் துன்பத்திற்கு ஆளாகும்போது அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் ஒரு முறை அவசர உதவி வழங்குவது இதன்  நோக்கமாகும்.  பத்திரிகை தகவல் அலுவலகம் அல்லது மாநில அரசுகள் அல்லது யூனியன் பிரதேசங்களில் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலிலோ அல்லது குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள்  தொடர்ந்து முழு நேர அளவிலோ அல்லது பகுதி நேர அளவிலோ செய்தி ஆசிரியர், செய்தியாளர், புகைப்படக்காரர், கேமராமேன்,  புகைப்பட இதழியல், சுதந்திரமான பத்திரிகையாளர் என்று

அங்கீகாரம் இல்லாத பட்டியலில் இடம் பெறாதவராகவோ  பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும்.

   பத்திரிகையாளர் மரணமடைந்தால் அவரது குடும்பத்துக்கு  5 லட்சம் ரூபாய் வரையிலும்-நிரந்தர ஊனமுற்றால்  ஐந்து லட்சம் ரூபாய் வரையிலும் உதவி வழங்கவும், கடுமையான நோய்களுக்காக சிகிச்சை பெறுவோர் மத்திய அரசின்  சுகாதாரத் திட்டத்திலோ இதர  காப்பீட்டுத் திட்டத்திலோ, சுகாதாரத்திட்டத்திலோ இடம் பெறாமல் இருந்தால், சிகிச்சைக்காக 3 லட்சம் ரூபாய் வரையிலும் இந்தத் திட்டத்தின் கீழ் உதவி கிடைக்கும்.

-------



(Release ID: 1525605) Visitor Counter : 268


Read this release in: English , Urdu