பிரதமர் அலுவலகம்

உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர் பிரதமரைச் சந்தித்தார்.

Posted On: 19 MAR 2018 10:39PM by PIB Chennai

உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர் திரு ராபர்ட்டோ அஜிவீடோ இன்று (19.03.18) புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திரமோடியைச் சந்தித்தார். உலக வர்த்தக அமைப்பு அமைச்சர்களின் முறைசாராக் கூட்டத்தில் பங்கேற்க தில்லி வந்துள்ளார் அவர்.

பலதரப்பு வர்த்தக அமைப்பிற்கு புத்துயிர் ஊட்டுவதற்கான வழிவகைகளை ஆராயும் விவாதத்தைத் தொடங்கியிருப்பதற்காக இந்திய அரசுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

     பலதரப்பு வர்த்தக அமைப்பை இந்தியா வலுவாக ஆதரிக்கிறது என்று பிரதமர் கூறினார். வளரும் நாடுகளின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில், உலக வர்த்தக அமைப்பின் நடவடிக்கைகளை முன்னுரிமைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுத்தினார். சுதந்திரமான வர்த்தகம் மற்றும் உலகமயமாக்கல் ஆகியவற்றின் பயன்கள் வளரும் நாடுகளில் தெளிவாகத் தெரியும் வகையில், உலக வர்த்தக அமைப்பு சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார். உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் நிலை, முறைசாராக் கூட்டம் வெற்றிபெற தமது வாழ்த்துக்களை பிரதமர் தெரிவித்துக் கொண்டார்.

------



(Release ID: 1525303) Visitor Counter : 140