ரெயில்வே அமைச்சகம்
ரயில்வேயின் உற்பத்தி திறனை அதிகரிக்க பயணிகள் ரயில் சேவை அட்டவணையில் புதிய முறையில் கணக்கீடு அடிப்படையிலான அணுகுமுறை அறிமுகம்.
Posted On:
16 MAR 2018 12:17PM by PIB Chennai
மின்சார மற்றும் டீசல் என்ஜினால் இயக்கப்படும் பயணிகள் ரயில் சேவையை மேம்படுத்த புதிய கணக்கீடு அடிப்படையிலான அணுகுமுறையை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. என்ஜின்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க மென்பொருள் சார்ந்த கணக்கீட்டின்படி முடிவெடுக்க உதவும் அமைப்பு இதற்காக பயன்படுத்தப்படவுள்ளது.
நாடு முழுவதும் 3300 மின்சார மற்றும் டீசல் என்ஜின்களால் இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் இந்திய ரயில்வேயால் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த என்ஜின்கள் சுழற்சி முறையிலான லோகோமோடிவ் லிங்க் எனப்படும் என்ஜின்கள் இணைப்பின்படி பயணிகள் ரயில் பயன்பாட்டிற்கு இயக்கப்படுகின்றன. இதன்படி சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு ஒதுக்கப்படும் ரயில் சேவையின்படி அந்தந்த 16 மண்டலங்கள் கைமுறையாக என்ஜின் இணைப்பை செய்து வருகின்றன.
வல்லுனர்களின் உதவியுடன் ரயில்வே அமைச்சகம் அகில இந்திய அளவில் பயணிகள் ரயில் சேவையை மேம்படுத்த என்ஜின்கள் இயக்கத்திற்கு உதவும் அமைப்பை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.
(Release ID: 1524961)
Visitor Counter : 150