பாதுகாப்பு அமைச்சகம்
குடியரசுத் தலைவரின் கொடிகளை 51-வது விமானப்படை ஸ்குவாட்ரன், 230-வது சமிக்ஞை பிரிவுக்கும் வழங்கும் நிகழ்ச்சிக்கான முன்னுரை
प्रविष्टि तिथि:
15 MAR 2018 1:04PM by PIB Chennai
ஹல்வாரா விமானப்படை நிலையத்தில் இம்மாதம் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் தலைவரின் கொடிகள் வழங்கும் பெருமை மிகு நிகழ்ச்சிக்கு முன்னோட்டமாக மேற்கத்திய விமானப்படைப் பிரிவின் தலைமைத் தளபதி ஏர்மார்ஷல் சி.ஹரிகுமார், பி.வி.எஸ்.எம், ஏ.வி.எஸ்.எம்., வி.எம்., வி.எஸ்.எம், ஏ.டி.சி, ஹல்வாரா விமானப்படை நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
குடியரசுத் தலைவரும், ஆயுதப்படைகளின் உச்சநிலைத் தளபதியுமான திரு ராம் நாத் கோவிந்த், விமானப்படையின் 51-வது ஸ்குவாட்ரனுக்கு பெருமைமிகு குடியரசுத் தலைவரின் ஸ்டாண்டர்ட்ஸ் கொடியையும், பெருமை மிகு குடியரசுத் தலைவரின் கலர்ஸ் கொடியை 230-வது சிக்னல் பிரிவிற்கும் வழங்கவுள்ளதாக ஏர்மார்ஷல் சி.ஹரிகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். விமானப்படையின் 51-வது ஸ்குவாட்ரன் தளபதி குருப் கேப்டன் சதிஷ் எஸ்.பவார், குடியரசுத் தலைவரின் ஸ்டாண்டர்ட் கொடியையும், 230-வது சிக்னல் பிரிவு நிலைய தளபதி குருப் கேப்டன் எஸ்.கே.திரிபாதி, கலர்ஸ் கொடியையும் குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள் என்று அவர் தெரிவித்தார். ஹல்வாரா விமானப்படை நிலையத்தில் இதற்கென வண்ணமிகு அணிவகுப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு குடியரசுத் தலைவர், இந்திய விமானப்படையின் 51-வது ஸ்குவாட்ரன் மற்றும் 230-வது சிக்னல் பிரிவு ஆகியவற்றின் முதல் நாள் அஞ்சல் உறைகளையும் வெளியிடுவார்.
ராணுவப்படைகள் பிரிவுகளுக்கு குடியரசுத் தலைவரின் கொடிகள் வழங்கப்படுவதே மிக உயரிய கவுரவமாகும். படைப்பிரிவுகளின் போர்க்கால மற்றும் அமைதிகால செயல்பாடு மற்றும் சாதனைகள் அடிப்படையில் குடியரசுத் தலைவரின் கொடிகள் பெறுவதற்கான பிரிவுகள் தெரிவு செய்யப்படுகின்றன. இந்தப் பிரிவுகள் கடந்த 25 ஆண்டுகளாக ஆற்றிய மிகச்சிறந்த சேவைகளுக்காக இந்த சிறப்பைப் பெறுகின்றன. போர் மற்றும் அமைதிக் காலங்களில் செயல்பாட்டுச் சிறப்பு, அர்ப்பணிப்பு, நிரூபிக்கப்பட்ட பங்களிப்பு ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலை தளத்தைப் பார்க்கவும்
-------
(रिलीज़ आईडी: 1524662)
आगंतुक पटल : 195