புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

தொலைதூரப் பகுதிகளில் பாசனத் தேவைகளுக்காக சூரிய சக்தி பம்புகள் நிறுவப்படும்

प्रविष्टि तिथि: 15 MAR 2018 12:47PM by PIB Chennai

மத்திய அரசு விவசாயிகளின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாடு பெருமத்திட்டம் (கேயூஎஸ்யூஎம்) என்ற திட்டத்தை உருவாக்கும் நடைமுறையைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின்படி:

  1. கிராமப்பகுதிகளில் இரண்டு மெகாவாட் திறன்கொண்ட கட்டமைப்புடன் இணைக்கப்படும் சூரியசக்தி மின்திட்டங்களை அமைத்தல் 
  2. மின்கட்டமைப்புடன் இணைப்புப் பெறாத விவசாயிகளின் பாசனத்தேவைகளை நிறைவு செய்வதற்காக தானாக செயல்படும் கட்டமைப்புடன் இணையாத சூரியசக்தி தண்ணீர் பம்புகளை அமைத்தல்,
  3. தற்போதுள்ள மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட விவசாயப் பம்புகளை சூரியசக்தி மயமாக்குதல் மூலம் மின்கட்டமைப்பு சப்ளையை நம்பியிராத நிலையை விவசாயிகளுக்கு ஏற்படுத்துதல் மற்றும் உபரி சூரிய மின்சக்தியை டிஸ்காம் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து கூடுதல் வருமானம் பெற வாய்ப்பு ஏற்படுத்துதல்,
  4. அரசுத்துறையில் இயங்கும் குழாய் கிணறுகள் மற்றும் நீரேற்றி பாசன வசதி பெறும் திட்டங்கள் ஆகியவற்றையும் சூரியசக்தி மயமாக்குதல்,

போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்தத் திட்டத்துக்கான ஒப்புதல் கிடைத்தவுடன் நிதித்தேவைகள், அமலாக்க நடைமுறை போன்ற விவரங்கள் இறுதி செய்யப்படும்.

மக்களவையில் இன்று (15,03,2018) கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய மின்சாரம், புது மற்றும் புதுப்பிக்கக் கூடிய எரிசக்தித் துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு ஆர் கே சிங், இத்தகவலைத் தெரிவித்தார்

--------


(रिलीज़ आईडी: 1524562) आगंतुक पटल : 191
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu