பாதுகாப்பு அமைச்சகம்

மேற்கத்திய விமான படையின் தலைமைத் தளபதி ஏர்மார்ஷல் சந்திரசேகரன் ஹரிகுமார் உத்தரகாண்ட் மாநில முதல் அமைச்சருடன் சந்திப்பு

Posted On: 14 MAR 2018 12:23PM by PIB Chennai

மேற்கத்திய விமான படை பிரிவின் தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் சி. ஹரி குமார் பி.வி.எஸ்.எம். ஏ.வி.எஸ்.எம். வி.எம். வி.எஸ்.எம். ஏ.டி.சி. தலைமையில் அதன்  உயர் அதிகாரிகள் குழு உத்தரகாண்ட் மாநில முதல் அமைச்சர் திரு. திரிவேந்திர சிங் ராவத்தை இன்று (14 மார்ச், 2018) சந்தித்தனர்.

“பல்வேறு நிகழ்வுகளின்போது, இந்திய விமான படைக்கு உத்தரகாண்ட் மாநில அமைப்புகள் அளித்த ஆதரவிற்காக முதல் அமைச்சர் திரு. திரிவேந்திர சிங் ராவத்திற்கு எனது நன்றிகள்” என்று ஏர் மார்ஷல் கூறினார்.

உத்தரகாண்ட்டில் இந்திய விமான படையின் புதிய தளத்தை அமைக்கும் திட்டம் குறித்தும் அதற்காக மாநில அரசு நிலம் ஒதுக்குவது குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. இந்த பகுதியின் கேந்திர முக்கியத்துவம் குறித்தும் விமான படை தளம் அமைக்க வேண்டிய நிலம் மாநிலத்தின் மலைப்பகுதியில் வேண்டும் என்பது குறித்தும் ஏர் மார்ஷல் முதல் அமைச்சரிடம் எடுத்துரைத்தார்.

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/PIC166XZ.jpg

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/PIC29U7N.jpg

 


(Release ID: 1524307) Visitor Counter : 116


Read this release in: English , Urdu , Hindi