கலாசாரத்துறை அமைச்சகம்

கடந்த மூன்றாண்டுகளில் 9131 முதிய கலைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகளுக்கு ஓய்வூதிய உதவி: டாக்டர் மகேஷ் சர்மா

Posted On: 12 MAR 2018 6:21PM by PIB Chennai

மகாராஷ்டிரா உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து கலைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகளின் நிதி மற்றும் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் அரசு தேவையான உணர்வும் கவலையும் கொண்டுள்ளது.

வயது முதிர்ந்த கலைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகளுக்கு உதவும் வகையில் அரசு கலைஞர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் மருத்துவ உதவித் திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ் மாதாந்திர ஓய்வூதியம் அடிப்படையில் நிதி உதவி அறுபது வயதுக்கு மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகளுக்கு அளிக்கப்படுகிறது.

ஓய்வூதியம் கோரி கலைஞர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களைப் பரிசீலிக்க நிபுணர்கள் குழுவின் கூட்டம் 2017 ஜூலை 31 வரை ஆகஸ்ட் 2 வரை கூட்டப்பட்ட்து. இந்தக் கூட்டத்தில் மகாரஷ்டிராவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட 344 கலைஞர்கள் உட்பட 1625 கலைஞர்களுக்கு கலைஞர்களுக்கான ஓய்வூதியம் அளிக்க பரிந்துரைக்கப்பட்ட்து.

 

கலைஞர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் மருத்துவ உதவி திட்ட்த்தின் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கை

ஆண்டு

2013-14

2014-15

2015-16

2016-17

மொத்தம்

2584

2967

2788

3376

 

 

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு மத்திய கலாச்சாரம் (தனிப்பொறுப்பு) மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றத்துறை இணையமைச்சர் டாக்டர் மகேஷ் சர்மா அளித்த எழுத்துபூர்வமான பதிலில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*****

 


(Release ID: 1524176)
Read this release in: English , Urdu