நீர்வளத் துறை அமைச்சகம்
கமாண்ட் பகுதி வளர்ச்சித் திட்டத்தின் நிதியை விரைந்து பயன்படுத்த கட்கரி அழைப்பு
प्रविष्टि तिथि:
13 MAR 2018 3:25PM by PIB Chennai
விரைவுபடுத்தப்பட்ட பாசன பயன் திட்டத்தின் கீழ் கமாண்ட் பகுதி வளர்ச்சி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை விரிவாகப் பயன்படுத்துமாறு மத்திய நீர் ஆதாரங்கள், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கைப் புத்துயிரூட்டல் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி கேட்டுக் கொண்டுள்ளார். கமாண்ட் பகுதி வளர்ச்சி குறித்த மாநாட்டை புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்த அமைச்சர் கமாண்ட் பகுதி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதி போதுமான அளவு பயன்படுத்தப்படாமல் இருப்பது குறித்து கவலை தெரிவித்ததுடன் கமாண்ட் பகுதி வளர்ச்சி முறையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை எனில் விரைவு படுத்தப்பட்ட பாசனப் பயன் திட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கமும் தோல்வியடையும் என்றார். கிராமப்புறங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் நகர்ப்புறங்களுக்கு குடிபெயர்வதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக நீர்ப் பற்றாக்குறை உள்ளது என திரு. கட்கரி குறிப்பிட்டார். அறிவியல் திட்டமிடுதல் மற்றும் நீர் ஆதாரங்கள் மேலாண்மை காலத்தின் கட்டாயம் என அவர் கூறினார். குறு, சொட்டு நீர் மற்றும் தூவுதல் போன்ற பல்வேறு புதிய பாசன முறைகள் பற்றிக் குறிப்பிட்ட திரு. கட்கரி, இது நீரை சேமிப்பதற்கு மட்டுமின்றி, விரிவுபடுத்தப்பட்ட வேளாண் உற்பத்திக்கும் உதவும் என்றும் ஒரு ஏக்கருக்கான உற்பத்தி செலவையும் குறைக்கும் என்றார். பெரிய அளவிலான அணைகளுக்கு பதிலாக தடுப்பு அணைகள், ரப்பர் அணைகள் மற்றும் சிறிய தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என திரு. கட்கரி குறிப்பிட்டார். செயலற்ற தொழில்நுட்பங்கள் மற்றும் பழைய முறைகளை தவிர்த்து இந்த விஷயம் குறித்து ஆலோசிக்க வேண்டும் என அவர் நிபுணர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
*****
(रिलीज़ आईडी: 1524095)
आगंतुक पटल : 129