சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

பஞ்சாபுக்கான சாலை மறுசீரமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல்

प्रविष्टि तिथि: 12 MAR 2018 3:40PM by PIB Chennai

பஞ்சாபில் 3 சாலைப் பிரிவுகளை மறுசீரமைக்கவும் மேம்படுத்தவும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

                என்எச்-254ல் முட்கி – ஜவஹர்சிங் வாலா இடையேயான 36 கி.மீ தூர சாலை இபிசி வகையின் கீழ் இருபக்க குறுகிய சாலைகளுடன் இருவழிப்பாதைகளாக மேம்படுத்தப்படும். ரூ.117.78 கோடி இந்த திட்டத்திற்கு செலவாகும்.  தற்போதுள்ள 61 சிறுபாலங்களில் 59 பாலங்கள் மறுகட்டுமானம் செய்யப்படும். மறுசீரமைப்பு பகுதியில் புதிதாக சிறிய பாலம் ஒன்றும் கட்டப்படும்.

மோகா, மக்கூ, ஹரிக்கே முதல் கல்ரா வரை கொள்கையளவில் ஏற்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை இபிசி வகையின் கீழ் இரு பக்கங்களிலும் குறுகிய சாலைகளுடன் மறுசீரமைக்கப்பட்டு இருவழிப்பாதைகளாக மேம்படுத்தப்படும். இதன் திட்டச் செலவு ரூ.293.64 கோடியாகும்.

இந்த திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவைப்படவில்லை. வனத்துறை அனுமதிக்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கியுள்ளன.

மேலும் விவரங்களுக்கு www.pb.nic.in  என்ற வலை தளத்தைப் பார்க்கவும்
                                                          ----


(रिलीज़ आईडी: 1523905) आगंतुक पटल : 93
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी