கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
கங்கை நதியில் நீர்வழிப் போக்குவரத்து திட்டம்
प्रविष्टि तिथि:
12 MAR 2018 2:14PM by PIB Chennai
நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநில அரசுகளுக்கு உதவி செய்யும் வகையில் வாரணாசி, பாட்னா, மூங்கர், பஹல்பூர், கொல்கத்தா, ஹால்டியா ஆகிய இடங்களில் கடல் படகு போக்குவரத்தை மேம்படுத்துவதற்காகவும், இதற்கான இடங்களை கண்டறிவதற்காகவும் சாத்தியக்கூறு ஆய்வறிக்கைகளை தயாரிக்க தொழில் முறையில் சிறந்த ஆலோசகர்களை இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் பணியமர்த்தியுள்ளது. ரூ. 5,369.18 கோடி மதிப்பீட்டில் உலக வங்கியின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் தேசிய நீர்வழி -1ல் (கங்கை) ஹால்டியா – வாரணாசி பிரிவில் கப்பல் போக்குவரத்துக்காக நீர்வழிப் போக்குவரத்து திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
மாநிலங்களவையில் இன்று (12.03.2018) கேள்வி நேரத்தின்போது எழுத்து மூலம் அளித்த பதிலில் கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் திரு மன்சுக் எல் மண்டாவியா இந்த தகவலை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு www.pb.nic.in என்ற வலை தளத்தைப் பார்க்கவும்.
---
(रिलीज़ आईडी: 1523897)
आगंतुक पटल : 150