குடியரசுத் தலைவர் செயலகம்

இவ்வார இறுதியிலிருந்து புதிய கோடைகால நேரத்திற்கு பாதுகாவலர் பணிமுறை மாற்றும் விழா

Posted On: 12 MAR 2018 11:48AM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மாளிகையின் முன்புறத்தில் இவ்வார இறுதியிலிருந்து (மார்ச் 17 – 18)  கோடைகால நேரத்திற்கு பாதுகாவலர் பணிமுறை மாற்றும் விழா நடைபெறும். சனிக்கிழமைகளில் 08.00 மணியிலிருந்து 08.40 மணிவரையும் ஞாயிற்றுக்கிழமைகளில் 17.30 மணியிலிருந்து 18.10 மணி வரையும் இவ்விழா நடைபெறும். இந்த நேரம் நவம்பர் 14, 2018 வரை பின்பற்றப்படும்.

பாதுகாவலர் பணிமுறை மாற்றும் விழாவை பொதுமக்கள் பார்வையிடலாம். புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை உள்ள  பார்வையாளர்கள் இருக்கைகள் கிடைப்பதை பொறுத்து கட்டணமின்றி விழாவை பார்வையிடலாம். குடியரசுத் தலைவர் மாளிகையின் நுழைவாயில் எண் 2 அல்லது 37 மூலம் வருகை அனுமதிக்கப்படும்.

                                ----
 



(Release ID: 1523845) Visitor Counter : 70


Read this release in: English , Urdu , Hindi