பிரதமர் அலுவலகம்

நாரி சக்தி விருது வென்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்

Posted On: 09 MAR 2018 6:59PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாரி சக்தி விருது வென்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

இந்த கலந்துரையாடலின் போது பிரதமர், சேவையே அனைத்து தர்மமும் எனப்பொருள்படும் ‘சேவா பரமோ தர்மா’ என்பது நமது பண்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்றார்.

விருது வென்றவர்கள் தங்கள் வாழக்கையை பிறருக்கு சேவை செய்ய அர்ப்பணித்துக் கொண்டனர் என்று பிரதமர் கூறினார். அவர்களது முயற்சியால் பயனடைந்தவர்களுக்கும் அப்பாற்பட்டு மொத்த சமுதாயத்துக்குமே உத்வேகம் ஏற்படுத்துவதாக அவர்களது பங்களிப்பு உள்ளது என்றார். நாடு சகோதரி நிவேதிதாவின் 150ஆவது ஆண்டுவிழாவை கொண்டாடி வருகிறது என்றும் அவர் தன்னலமற்ற சேவையின் மறு உருவமாக விளங்கியவர் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

சமுதாயத்துக்கு சேவை செய்யும் முயற்சிகள் இந்திய பண்பாட்டின் ஒரு பகுதி என்று குறிப்பிட்ட பிரதமர், இது தர்மசாலைகள், பசு மடங்கள் மற்றும் நாடெங்கும் நன்கு தெரியும் கல்வித் திட்டங்கள் போன்றவற்றிலும் கூட எதிரொலிக்கிறது என்று கூறினார்.

மத்திய மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி மேனகா காந்தி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.



(Release ID: 1523580) Visitor Counter : 129