மத்திய அமைச்சரவை

சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு மரியாதை அளிக்கும் திட்டத்தை 2017 முதல் 2020 வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 07 MAR 2018 7:17PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு மரியாதை அளிக்கும் திட்டத்தை (SwatantraSainikSammanYojana - SSSY) மார்ச் 31, 2017-உடன் முடிவடையும் 12-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தைத் தாண்டி, 2017 முதல் 2020-ம் ஆண்டுவரை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்புதல் மூலம், சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு, நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்கு அளித்த பங்களிப்புக்கு மரியாதை அளிக்கும் அடையாளமாக மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வழிவகை செய்யப்படுகிறது. இதேபோல, உயிர்த்தியாகம் செய்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளை சார்ந்துள்ள தகுதிவாய்ந்த வாழ்க்கைத் துணை, அவர்களுக்குப் பிறகு, திருமணமாகாத மற்றும் வேலைக்கு செல்லாத மகள்கள் மற்றும் சார்ந்துள்ள பெற்றோர்களுக்கு, உரிய விதிகளின் படி மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்.

நிதிச் செலவினம்:

சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தை 2017-2020 காலத்துக்கு நீட்டிப்பதன் மூலம், ரூ.2,552.93 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். தொடர் செலவினத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் வழங்க வேண்டிய தொகையை கீழே காணலாம்:

 

(ரூபாய் கோடியில்)

வ.

எண்

ஆண்டுகள் அடிப்படையில் ஏற்படும் செலவு மதிப்பீடுகள்

2017-18

 

2018-19

 

2019-20

 

ஒட்டுமொத்தமாக மூன்று ஆண்டுகளுக்கு

1.

 

சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம்

750

 

825

 

907

 

2482

 

2.

 

சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு இலவச ரயில் பயண சலுகை

10

 

30

 

30

 

70

 

3.

 

சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு நிரந்தர வீடு

0.31

 

0.31

 

0.31

 

0.93

 

 

 

ஒட்டுமொத்தம்

 

760.31

 

855.31

 

937.31

 

2552.93

 

 

பின்னணி:

போர்ட்பிளேரில் உள்ள செல்லுலர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளை கவுரவிக்கும் வகையில், “முன்னாள் அந்தமான் அரசியல் கைதிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தை” கடந்த 1969-ம் ஆண்டில் இந்திய அரசு அறிமுகப்படுத்தியது. நாடு சுதந்திரம் அடைந்து 25 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் வகையில், சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான ஓய்வூதியத்துக்கு நிதி வழங்கும் வழக்கமான திட்டத்தை 1972-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. அதற்குப் பிறகு, 1.8.1980 முதல் “சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான ஓய்வூதியத் திட்டம், 1980” என்ற பெயரில் தளர்த்தப்பட்ட திட்டம் அமல்படுத்தப்பட்டது. 2017-18-ம் நிதியாண்டு முதல், இந்தத் திட்டத்தின் பெயர், “சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு மரியாதை அளிக்கும் திட்டம்” என்று மாற்றம் செய்யப்பட்டது. இதுவரை ஒட்டுமொத்தமாக 1,71,617 சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் அவர்களைச் சார்ந்திருக்கும் தகுதிவாய்ந்த நபர்களுக்கு மத்திய ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், தற்போதைய நிலையில், 37,356 சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் அவர்களை சார்ந்திருக்கும் தகுதிவாய்ந்த நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், 12,657 சுதந்திரப் போராட்டத் தியாகிகள், அவர்களைச் சார்ந்திருக்கும் 23,127 வாழ்க்கைத் துணைகள் மற்றும் 1,572 மகள்கள் அடங்குவர். இந்த ஓய்வூதியம் தொடக்கத்தில் மாதந்தோறும் ரூ.200 ஆக வழங்கப்பட்டது. பின்னர் நேரத்துக்கு நேரம் மாற்றியமைக்கப்பட்டது. 15.8.2016 முதல் அனைத்து வகையிலும் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டது. மேலும், தொழில் துறை பணியாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டெண் அடிப்படையில், சுதந்திரப் போராட்ட ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்ட அகவிலை நிவாரண முறையை நிறுத்திவிட்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை வழங்கப்படும் அகவிலைப் படி முறை சுதந்திரப் போராட்ட ஓய்வூதியதாரர்களுக்கும் அமல்படுத்தப்பட்டது. ஓய்வூதியதாரர்களுக்கான படி, அகவிலை நிவாரணம் என்று அழைக்கப்பட்டது. மத்திய சுதந்திரப் போராட்டத் தியாகி ஓய்வூதியதாரர்களுக்கு பல்வேறு வகையிலும் தற்போது வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையை கீழே காணலாம்:

வ. எண்

சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வகை

15.8.2016 முதல் அடிப்படை ஓய்வூதியம் ரூபாயில்

(மாதத்துக்கு)

3% அகவிலை நிவாரணத்துடன் ஒட்டுமொத்த ஓய்வூதியத் தொகை (மாதத்துக்கு)

1.

முன்னாள் – அந்தமான் அரசியல் கைதிகள்/ வாழ்க்கைத் துணைகள்

30,000/-

30,900/-

2.

பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இந்தியாவுக்கு வெளியே பாதிக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத் தியாகிகள்/ வாழ்க்கைத் துணைகள்

28,000/-

28,840/-

3.

ஐஎன்ஏ உள்ளிட்ட மற்ற சுதந்திரப் போராட்டத் தியாகிகள்/வாழ்க்கைத் துணைகள்

26,000/-

26,780/-

4.

சார்ந்திருக்கும் பெற்றோர்கள்/ தகுதிவாய்ந்த மகள்கள் (எந்த தருணத்திலும் அதிகபட்சமாக 3 மகள்கள்)

சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு வழங்கப்படும் தொகையில் 50%. அதாவது, ரூ.13,000 முதல் ரூ.15,000 வரையான அளவு.

சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு வழங்கப்படும் தொகையில் 50%. அதாவது, ரூ.13,390 முதல் ரூ.15,450 வரையான அளவு.

சுதந்திரப் போராட்டத் தியாகி ஓய்வூதியதாரர்களில் 73% பேரின் வங்கிக்கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டுக்குள் 100% வங்கிக்கணக்குகளில் ஆதார் எண் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

***



(Release ID: 1523173) Visitor Counter : 573


Read this release in: English , Telugu