மத்திய அமைச்சரவை
கல்வித்தகுதிகளை பரஸ்பரம் அங்கீகரிக்க வகை செய்யும் இந்தியா-பிரான்ஸ்-க்கு இடையிலான உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
07 MAR 2018 7:24PM by PIB Chennai
கல்வித்தகுதிகளை பரஸ்பரம் அங்கீகரிக்க வகை செய்யும் இந்தியா-பிரான்ஸ்-க்கு இடையிலான உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இருநாடுகளுக்கும் இடையே அனுமதி மற்றும் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் பயின்ற காலத்தையும் அவர்கள் கற்ற கல்வியையும் அங்கீகரிக்க இந்த உடன்பாடு வகை செய்கிறது. பிரான்ஸ் அதிபர் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும்போது இந்த உடன்பாடு கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உடன்பாடு இந்தியாவுக்கும் பிரான்ஸூக்கும் இடையே கல்வி உறவுகளை ஆழப்படுத்த உதவும். இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி உறவுகளை உயர்த்துவதிலும் அது பங்களிக்கும். இருநாடுகளுக்கும் இடையே கல்விக்காக மாணவர்கள் சென்று வருவதை ஊக்குவிக்கும் கருவியாக இந்த உடன்பாடு விளங்கும். மாணவர்கள் தாங்கள் ஒரு நாட்டில் விட்ட கல்வியை அடுத்த நாட்டில் தொடருவதற்கான சாத்தியக்கூறுகளை இந்த உடன்பாடு அளிக்கும். மேலும் உயர் கல்வியில் மீச்சிறப்பு தன்மையை புதுமையான ஒத்துழைப்புகள், ஆராய்ச்சி நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் உருவாக்கும். இதன் காரணமாக இந்தியாவின் கல்வித்தரம் மேம்பாடு அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Release ID: 1523152)