மத்திய அமைச்சரவை

இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே சுற்றுச்சூழல் துறையில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 07 MAR 2018 7:17PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் சுற்றுச்சூழல் துறையில் இந்தியா பிரான்ஸ் இடையே ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை ஆதாரங்கள் மேலாண்மை ஆகியவற்றில் சமபங்கு, எதிரெதிர் மற்றும் இயற்கைப் பயன்கள் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு இரு நாடுகளும் நெருக்கமான மற்றும் நீண்டகால ஒத்துழைப்பை அளிக்க இந்த ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் வகை செய்யும்.

ஒத்துழைப்புக்கான இந்த ஒப்பந்தம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சமீபத்திய தொழில்நுட்பங்களையும் சிறந்த நடைமுறைகளையும் கொண்டுவரவும், சிறந்த பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பில் சிறந்த நிர்வாகம் ஆகியவற்றை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


(रिलीज़ आईडी: 1523130) आगंतुक पटल : 168
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Assamese , Telugu