தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிரந்தரக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க புதிய வசதி அறிமுகம்

Posted On: 27 FEB 2018 10:54AM by PIB Chennai

யூமாங் செல்போன் செயலியில் வைப்பு நிதி வாரிய இணைப்பைப் பயன்படுத்தி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிரந்தரக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க, சந்தாதாரர்கள் வசதிக்காக, வைப்புநிதி அமைப்பு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் சார்பில் ஏற்கெனவே உள்ள  www.epfindia.gov.in >> Online Services >> e-KYC Portal>> LINK UAN AADHAAR. வலைத்தளத்துடன் கூடுதலாக இதில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மின்னணு முறையிலான உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள் திட்டத்தின் இணையப் பக்கத்தில், சந்தாதாரரின் பயோமெட்ரிக் விவரங்களைப் பயன்படுத்தி, நிரந்தரக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்தப் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: www.pib.nic.in இணையத்தளத்தைக் காணவும்.


(Release ID: 1521908) Visitor Counter : 171
Read this release in: English , Urdu , Hindi , Gujarati