சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

ராஜஸ்தானில் தேசிய நெடுஞ்சாலை எண் – 925-ல் ககாரியா – பாவோரி கலான் – செர்வா – பகாசர் பிரிவு மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண் 925ஏ-ல் சதா – காந்தவ் இடையிலான பணிகளுக்கான ஒப்பந்த உத்தரவுகளைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கியுள்ளது.

प्रविष्टि तिथि: 26 FEB 2018 1:22PM by PIB Chennai

ராஜஸ்தானில் தேசிய நெடுஞ்சாலை எண் – 925-ல் ககாரியா – பாவோரி கலான் – செர்வா – பகாசர் பிரிவு மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண் 925ஏ-ல் சதா – காந்தவ் இடையிலான பணிகளுக்கான ஒப்பந்த உத்தரவுகளைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கியுள்ளது. இந்தத் திட்டப் பணியின் மொத்த நீளம் 196.970 கிலோ மீட்டர் ஆகும். இந்த நெடுஞ்சாலையானது வாகன நிறுத்துமிடங்களுடன் கூடிய இருவழிச்சாலையாக அமைய உள்ளது.

இந்தத் திட்டத்திற்கான மொத்தச் செலவு 1134 கோடியே 12 லட்சம் ரூபாயாகும். இந்தத் திட்டத்தில் ஒன்பது சிறிய பாலங்கள், ஒரு ரயில்வே மேம்பாலம், இரண்டு ஊதுகொம்பு வடிவப் பாதைகள் இரண்டு வாகனச் சுரங்கப்பாதைகள் மற்றும் பதினொரு இலகு ரக வாகன சுரங்கப்பாதைகளும் அமைக்கப்பட உள்ளன.

 


(रिलीज़ आईडी: 1521831) आगंतुक पटल : 140
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu