பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ரஸ்டம் 2 விமானம் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது

Posted On: 25 FEB 2018 2:48PM by PIB Chennai

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அதன் ரஸ்டம் 2 ரக விமானத்தை சித்ரதுர்காவின் சாலக்கேரேயில் உள்ள விமானப்படை சோதனைத் தளத்தில் வெற்றிகரமாகச் சோதித்தது. அதிகச் சக்தி வாய்ந்த எஞ்ஜினுடன் கூடிய பயன்பாட்டு வசதி உடைய முதல் விமானம் இது என்பதால் இந்த விமானம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த விமானத்தின் அனைத்துக் கூறுகளும் இயல்பாகச் செயல்படுகின்றன.(Release ID: 1521735) Visitor Counter : 92


Read this release in: English , Urdu