ரெயில்வே அமைச்சகம்

அதிக குதிரை சக்தித் திறன் கொண்ட இரண்டு அதிநவீன ரயில் எஞ்சின்களை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது

प्रविष्टि तिथि: 23 FEB 2018 2:12PM by PIB Chennai

அரசுதனியார் பங்களிப்புத் திட்டத்தின் கீழ், ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் இணைந்து இந்திய ரயில்வே, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட அதிநவீனமான, பாதுகாப்பான கதவுடன் கூடிய இருமுனை டிரான்சிஸ்டர் தொழில்நுட்ப வசதி கொண்ட, உயர் திறனுடன் வேகமாக இயக்கக் கூடிய இரண்டு ரயில் எஞ்சின்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எஞ்சின்களை இந்திய ரயில்வேயிடம் ஒப்படைப்பதன் அடையாளமாக, அவற்றுக்குரிய சாவிகளை, லக்னோவின் ஆலம்பாக்கில் உள்ள வடக்கு ரயில்வே டீசல் பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரயில்வே வாரியத் தலைவர் திரு. அஸ்வனி லோகானியிடம், ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் வழங்கியது.

     ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், அதிக குதிரை சக்தி திறன் கொண்ட இந்த இரண்டு முன்மாதிரி எஞ்சின்கள், இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ், முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, அரசு-தனியார் பங்களிப்பு மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கான மொத்த முதலீடு 13 ஆயிரம் கோடி ரூபாயில், இந்திய ரயில்வே தனது பங்களிப்பாக 26 சதவீதத்தை  கொண்டுள்ளது.

     பாதுகாப்பான கதவுடன் கூடிய இருமுனை டிரான்சிஸ்டர் தொழில்நுட்ப வசதி கொண்ட இந்த எஞ்சின்களில், மின்னணு விசையாகப் பயன்படுத்தக் கூடிய மூன்று முனைய சக்தி செமிகண்டக்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இக்கருவிகள்,   உயர்திறனுடன் வேகமாக இயக்கக் கூடிய ஒருங்கிணைந்த வசதிகளைக் கொண்டவையாகும்தற்போது பயன்பாட்டில் உள்ள இருமுனை டிரான்சிஸ்டர் எஞ்சின்களைவிட அதிக மின்சக்தி கொடுக்கக் கூடிய வகையில் இந்த எஞ்சின்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


(रिलीज़ आईडी: 1521519)
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Hindi