நித்தி ஆயோக்
2018 நிதிநிலை அறிக்கை தேசியக் கொள்கை, தொழில்நுட்பங்களின் வரையறையில் நிதி ஆயோக்கின் பங்கை உயர்த்தியுள்ளது
Posted On:
21 FEB 2018 2:29PM by PIB Chennai
யர்த்தியுள்ளது
நிதி அமைச்சர் தாக்கல் செய்த புதிய இந்தியா நிதிநிலை அறிக்கை நாட்டின் நிலைமாற்றத்திற்கான நிதி ஆயோக்கின் பங்களிப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக மத்திய திட்டமிடுதல் (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு ராவ் இந்திரஜித் சிங் கூறியுள்ளார். நிதி ஆயோக் திட்டங்கள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் பட்ஜெட் ஒதுக்கீடு குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
நிதி ஆயோக்கின் கீழ் இயங்கும் திட்டமிடுதல் அமைச்சகத்திற்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட, 20 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. 2017-18-ல் ரூ.279.79 கோடியாக இருந்த ஒதுக்கீடு 2018-19-ல் ரூ.339.65 கோடியாக உயர்ந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் விவசாயக் கொள்கை போன்ற முக்கிய விஷயங்களில் நித்தி ஆயோக்கின் பங்கை நிதிநிலை அறிக்கை வரையறுத்துள்ளது.
நிதிநிலை அறிக்கையில் நிதி ஆயோக்
மத்திய மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை பெறுவதற்கு தேவையான வழிமுறையை ஏற்படுத்தும்.
நிதி ஆயோக் மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, நில உடைமையாளர்களின் உரிமைகளுக்கு பாதகம் ஏற்படாத வண்ணம், குத்தகைதாரர்களுக்கு கடன் கிடைக்க உரிய வழிமுறையை வகுக்கும்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு விஷயத்தில் நமது முயற்சிகளுக்கு வழிகாட்டும் தேசிய திட்டத்தை நிதி ஆயோக் முன்னெடுக்கும்.
பல்வேறு திட்டங்கள் மூலமாக நடைமுறைக் கொள்கை குறுக்கீடுகளில் நிதி ஆயோக் நேரடியாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும்.
அவற்றில் சில திட்டங்கள், அடல் புதுமை இயக்கம், கூட்டுறவு கூட்டமைப்பு, போட்டி சார்ந்த கூட்டமைப்பு, நிலைத்த மேம்பாட்டு இலக்குகள், பொருளாதாரத்தின் 15 முக்கிய பிரிவுகளில் பயன் அடிப்படையிலான மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு, தேசிய மற்றும் சர்வதேச கூட்டு முயற்சி, தொழில்நுட்ப வரையறைகளை பின்பற்றுவது, ஆராய்ச்சி கூட்டு முயற்சிகள், தீர்ப்பாயங்களை வலுப்படுத்துவது மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் ஆகும்.
(Release ID: 1521300)
Visitor Counter : 258