மத்திய அமைச்சரவை

இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையேயான திரைப்பட கூட்டுத் தயாரிப்பு உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 20 FEB 2018 1:19PM by PIB Chennai

இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையேயான திரைப்பட கூட்டுத் தயாரிப்பு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடித் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு பின்னேற்பு ஒப்புதலை வழங்கியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் திரு. பென்ஜமின் நெதேன்யாகு ஜனவரி 15, 2018 இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட போது புதுதில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில் இதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திடப்பட்டது.

இந்தியத் திரைப்படத்தை சர்வதேச குழுவுடன் இணைந்து தயாரிப்பதன் மூலம் இந்தியத் தயாரிப்பாளருக்கு சர்வதேச நிதியை அணுகவும், சர்வதேச அளவில் கதை, திறன் மற்றும் விநியோகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவும் இது வாய்ப்பளிக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் திரைப்படத்தை இணைந்து தயாரிக்கும் பொழுது இந்தியா மற்றும் இஸ்ரேலில் இந்த திரைப்படம் தேசிய தயாரிப்பாகக் கருதப்படும். இதில் இரண்டு நாடுகளின் படைப்பு, கலை, தொழில்நுட்பம், நிதி, சந்தைப்படுத்துதல்  சார்ந்த வளங்கள் குழு அமைய வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது. இணைத் தயாரிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் இரு நாடுகளில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் உள்நாட்டு தயாரிப்பாகப் பங்கேற்க முடியும். இரு நாடுகளிலும் தயாரிப்பு மற்றும் படப்பிடிப்பிற்கு பிந்தையப் பணிகளுக்கான தயாரிப்புச் சார்ந்த ஊக்கத் தொகைப் பெற இத்திரைப்படங்களுக்கு அணுமதி உண்டு.

திரைப்பட கூட்டுத் தயாரிப்பு ஒப்பந்தம் கலை மற்றும் கலாச்சார பரிமாற்றம், நல்லுறவு ஏற்படுத்துதல், இருநாட்டு மக்களுக்கு இடையே புரிந்துணர்வு ஏற்படுத்தவும், திரைப்பட தயாரிப்புக் குறித்த அம்சங்களைப் புரிந்துக் கொள்ளவும் இது வழிவகுக்கிறது. கலைத்துறை, தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாரா ஊழியர்களுக்கும் இந்த ஒப்பந்தம் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

 

 

*******



(Release ID: 1521096) Visitor Counter : 126


Read this release in: English , Urdu , Gujarati , Telugu